திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; ஓய்வுபெற்ற உளவுத்துறை எஸ்.ஐ கைது.!
சென்னையில் உள்ள ராயபுரம் பகுதியில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் ஜெபக்குமார் (வயது 55). காவல்துறையில் உளவுத்துறை உதவி ஆய்வாளராக பணியாற்றி, கடந்த 2019ல் விருப்ப ஓய்வு பெற்றவர் ஆவார்.
இவர் தனியார் பள்ளியில் பயின்று வரும் 9ம் வகுப்பு மாணவியான 14 வயது சிறுமிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த விஷயத்தை சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்து இருக்கிறார்.
இதனைக்கேட்டு அதிர்ந்துபோன குடும்பத்தினர், ராயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் ஜெபகுமாரின் செயல்பாடுகள் தெரியவந்தன.
இதனையடுத்து, ஜெபக்குமார் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் சிறையில் அடைத்தனர்.