மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மார்பிங் போட்டோ மிரட்டலால் கல்லூரி மாணவி தற்கொலை; இளைஞர் காந்திஜி கைது.!
சென்னையில் உள்ள விருகம்பாக்கம் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர், கடந்த ஜூலை 25 ம் தேதியன்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த விஷயம் குறித்து நடந்த விசாரணையில், மாணவி மிரட்டல் சம்பவத்தால் தற்கொலை செய்தது தெரியவந்தது.
ஆபாசமாக சித்தரிப்பு
மாணவி இன்ஸ்டாகிராம் பயன்படுத்தி வந்த நிலையில், அவரின் புகைப்படத்தை எடுத்த மர்ம நபர், ஆபாசமாக அதனை சித்தரித்து அனுப்பி மிரட்டி இருக்கிறார். தான் சொல்வதை கேட்காத பட்சத்தில், சித்தரிக்கப்பட்ட ஆபாச படத்தை இணையத்தில் வெளியிடுவேன் எனவும் மிரட்டி இருக்கிறார்.
இதையும் படிங்க: இன்ஸ்டாவில் எமனாக வந்த மெசேஜ்; மார்பிங் போட்டோவால் மாணவி தூக்கிட்டு தற்கொலை.!
ராமநாதபுரத்தை சேர்ந்தவர் கைது
இதனால் பயந்துபோன மாணவி தற்கொலை செய்துகொண்டது உறுதியானது. இதனையடுத்து, தொழில்நுட்ப ரீதியாக களமிறங்கிய அதிகாரிகள், மாணவியை மிரட்டிய நபர் குறித்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், இன்று இராமநாதபுரம் பகுதியை சேர்ந்த நபர் காந்திஜி என்பவரை அதிகாரிகள் கைது செய்தனர்.
இதையும் படிங்க: #Breaking: 29 மாவட்டங்களில் வெளுத்துவாங்கப்போகும் கனமழை; சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!