பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
தனிமையை சாதகமாக்கி அத்துமீறல்.. 13 வயது சிறுமிக்கு குளியலறையில் நேர்ந்த கொடுமை.. அலறித்துடித்த பயங்கரம்.!
பெற்றோரின் சண்டையில் அனாதையாக்கப்பட்ட பெண்மணி பாட்டியுடன் வசித்து வந்த நிலையில், சிறுமியின் தனிமையை பயன்படுத்தி அண்டை வீட்டு காமுகன் குளியலறையில் எட்டிப்பார்த்து சில்மிஷத்தில் ஈடுபட்ட பயங்கரம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி, ஆனைமலை கிராமத்தில் 13 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் அங்குள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு பயின்று வருகிறார். சிறுமியின் பெற்றோர் குடும்ப தகராறு காரணமாக பிரிந்துவிடவே, இருவரும் இரண்டாவது திருமணம் செய்துகொண்டுள்ளார். இதனால் சிறுமி தனது பாட்டியின் வீட்டில் தங்கியிருந்தவாறு பயின்று வருகிறார்.
சம்பவத்தன்று, சிறுமி குளியலறையில் குளித்துக்கொண்டு இருந்தபோது, பக்கத்து வீட்டில் வசித்து வந்த கூலித்தொழிலாளி காளிமுத்து (வயது 47) என்பவன் எட்டிப்பார்த்துளான். மேலும், சிறுமியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைத்து, வீட்டில் யாரும் இல்லாததை உறுதி செய்து சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளான்.
இதனால் அதிர்ந்துபோன சிறுமி அலறவே, பயந்துபோன காளிமுத்து அங்கிருந்து தப்பி சென்றுள்ளான். சிறுமியின் பாட்டி வீட்டிற்கு வந்ததும் தனக்கு நடந்ததை கூறி சிறுமி கதறியழுத்துள்ளார். இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பாட்டி ஆனைமலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரை ஏற்ற காவல் துறையினர் வெளியூர் தப்பிச்செல்ல முயன்ற காளிமுத்துவை அதிரடியாக கைது செய்தனர். பின் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.