மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கோவை: ஸ்பீக்கரில் சவுண்ட் வைத்ததால் வந்த வினை; அப்பாவி இளைஞர் கொலை., 5 பேர் கும்பல் வெறிச்செயல்.!
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள உக்கடம், கெம்பட்டி காலனியில் வசித்து வருபவர் கோகுல் கிருஷ்ணன் (வயது 24). இவர் செட்டிவீதி பகுதியில் தங்க நகைசெய்யும் தொழில் செய்து வருகிறார். நேற்று முனத்தினம் கோகுல் கிருஷ்ணன் நண்பர்களுடன் சேர்த்து மதுபானம் அருந்தி இருக்கிறார்.
அச்சமயம், அங்கு வந்த நாகராஜ், பிரவீன், சூர்யா, சந்துரு, சஞ்சய் ஆகியோர் கும்பல், முன்விரோதம் காரணமாக கோகுலிடம் தகராறு செய்துள்ளது. இந்த சம்பவத்தில் இருதரப்பு மோதல் உண்டாகவே, கோகுலை கத்தியால் குத்திய கும்பல் அங்கிருந்து தப்பிச்சென்றது.
பரிதாபமாக பறிபோன உயிர்
இதில் கோகுல் நிகழ்விடத்திலேயே உயிரிழந்துவிட, தகவல் அறிந்து வந்த செல்வபுரம் காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். கொலை சம்பவத்தில் தொடர்புடைய ஐவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: #Breaking: 3 வயது சிறுவன் கொடூர கொலை; குடும்ப தகராறில் பெண் வெறிச்செயல்.. நெல்லையில் பயங்கரம்.!
அதிகாரிகள் நடத்திய விசாரணையில் கோகுல கிருஷ்ணனின் உறவினர் தனசேகர் என்பவரின் வீட்டருகே வசித்து வரும் சிவகுமார், எப்போதும் பாடலை சத்தமாக வைத்து கேட்பதை வாடிக்கையாக கொண்டுள்ளார். இந்த விஷயம் குறித்து தனசேகர் கேட்டபோது, சிவசங்கர் மற்றும் பிரவீன் சேர்ந்து தகராறு செய்துள்ளனர்.
ஸ்பீக்கரில் சவுண்ட் வைத்ததால் வந்த வினை
இந்த விவகாரத்தில் கோகுலகிருஷ்ணன் தலையிட்டதனால், பிரச்சனை மடைமாறி கோகுல் மீது எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அந்த பிரச்சனை அன்றைய நிலையில் சமாதானம் ஏற்படுவதுபோல இருந்தாலும், பகைமை உணர்வு வளர்ந்துள்ளது. இதனிடையே, தான் கோகுல் சம்பவத்தன்று எதிரிகளால் கொல்லப்பட்டு இருக்கிறார்.
கோகுல் கொலை செய்யப்பட்ட மறுநாள் காலை, அவரின் அண்ணனுக்கு திருமணம் நடைபெறவிருந்த நிலையில், குடும்பத்தினர் சகோதரரிடம் உண்மையை மறைத்து திருமணம் நடத்தி வந்தனர். திருமணம் முடிந்ததும் உண்மை தெரியவர, திருமணத்திற்கு வாழ்த்துசொல்லவந்தவர்கள் முதல் குடும்பத்தார் வர சோகத்தில் ஆழ்ந்தனர்.
இதையும் படிங்க: சொத்துக்காக இப்படியா? தந்தை, தங்கை கொடூரமாக கொலை.. கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி.!