திருமணநிகழ்ச்சியில் குத்தாட்டம் போட்ட நடிகை சாய்பல்லவி! வைரலாகும் டான்ஸ் வீடியோ....
நாளுக்கு நாள் குறைந்துவரும் கொரோனா பாதிப்பு! இன்றைய பாதிப்பு மற்றும் இறப்பு எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு சற்று குறைய தொடங்கியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4295 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி தமிழகத்தில் இன்று மேலும் புதிதாக 295 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் இன்று ஒரே நாளில் 1,132 பேர் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6,83,486 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு சிகிச்சைபெற்றுவந்த 57 பேர் (அரசு மருத்துவமனை -30, தனியார் மருத்துவமனை -27) இன்று உயிரிழநதுள்ளன்னர். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 10,586 ஆக உயர்ந்துள்ளது.
இன்று சற்று ஆறுதல் தரும் விதமாக 5,005 பேர் இன்று ஒரேநாளில் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன்மூலம் மொத்தம் 6,32,708 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். 40,192 பேர் இன்னும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.