திருமணநிகழ்ச்சியில் குத்தாட்டம் போட்ட நடிகை சாய்பல்லவி! வைரலாகும் டான்ஸ் வீடியோ....
மக்களுக்கு குட் நியூஸ்! தமிழகத்தில் தொடர்ந்து குறைந்துவரும் கொரோனா பாதிப்பு! இன்றைய பாதிப்பு எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைய தொடங்கியுள்ள தகவல் மக்கள் மத்தியில் சற்று மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் ஏற்படும் கொரோனா பாதிப்பு மற்றும் அன்றாட எண்ணிக்கை குறித்த தகவல்களை தமிழக சுகாதாரத்துறை அன்றாடம் வெளியிட்டுவருகிறது. அந்தவகையில் இன்று வெளியான தகவலின்படி தமிழகத்தில் இன்றும் மேலும் புதிதாக 4,462 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 52 பேர் உயிரிழந்துள்ளனர்.
இன்று மட்டும் அதிகபட்சமாக சென்னையில் 1,130 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்க்ளின் எண்ணிக்கை 6,70,392 ஆக உள்ளது. இன்று மட்டும் 52 பேர் கொரோனாவால் உயிரிழந்தநிலையில் இதுவரை தமிழகத்தில் 10,423 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.
இன்று சற்று ஆறுதல் தரும்விதமாக கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த 5,083 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரையில், 6,17,403 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர்.