"பாதி மலையை காணும்.. யார் கேள்வி கேட்பா? வயிறெல்லாம் எரியுது" - மோகன் ஜி.!
தமிழகத்தில் இன்று மேலும் 69 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி..! மொத்த எண்ணிக்கை 690 ஆக உயர்வு.!

தமிழகத்தில் இன்று மேலும் 69 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதார துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். இதன் மூலம் தமிழகத்தில் மொத்தமாக 690 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் உஹான் நகரில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த உலக நாடுகள் அனைத்தும் தீவிரமாக போராடிவருகிறது. இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது.
தமிழகத்தை பொறுத்தவரை ஆரம்பத்தில் கட்டுக்குள் இருந்த கொரோனா டெல்லி மாநாடு விவகாரத்துக்கு பிறகு பலமடங்கு அதிகரித்துள்ளது. இந்நிலையில் நேற்றுவரை தமிழகத்தில் 621 ஆக இருந்த பாதிப்பு இன்று 690 ஆக அதிகரித்துள்ளது. அதுமட்டும் இல்லாமல், கொரோனா காரணமாக இன்று ஒருவர் பலியாகியுள்ளார்.
கொரோனாவால் இதுவரை தமிழகத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்வு. 19 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பியுள்ளதாகவும் தமிழக சுகாதார துறை செயலாளர் பீலா ராஜேஷ் பேட்டியில் தெரிவித்துள்ளார்.