மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அதிகாலையில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து அரசு - ஆம்னி பேருந்து மோதி விபத்து; 24 பேர் காயம்.!
சாலைத்தடுப்பில் மோதி விபத்து
புதுச்சேரி மாநிலத்தில் இருந்து காரைக்கால் நோக்கி பயணித்த அரசு பேருந்து ஒன்று, இன்று அதிகாலை கடலூர் மாவட்டம் ரெட்டிச்சாவடி பகுதியில் சென்றுகொண்டு இருந்தது. இந்த பேருந்து திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலைத்தடுப்பில் மோதி விபத்தில் சிக்கியது.
இதையும் படிங்க: திருமண நிகழ்ச்சியில் பரிமாறப்பட்ட உணவு சாப்பிட்டு 2 பேர் மரணம்; அடுத்தடுத்து நடந்த சோகம்.!
இந்த விபத்து ஏற்பட்ட நேரத்தில், அரசு பேருந்தை பின்தொடர்ந்து வந்த ஆம்னி பேருந்தும், அரசு பேருந்தின் மீது மோதியது. தனியார் ஆம்னி பேருந்து சென்னையில் இருந்து வேளாங்கண்ணி நோக்கி பயணிக்கையில் விபத்து நடந்துள்ளது.
24 பயணிகளுக்கு காயம்
இந்த விபத்தில் இரண்டு பேருந்துகளில் பயணம் செய்த 24 பயணிகள் லேசான காயம் அடைந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் மற்றும் மீட்பு படையினர், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டனர்.
அதிகாலை நேரத்தில் நடைபெற்ற விபத்தின் காரணமாக 1 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு போக்குவரத்தை சீர்படுத்தினர். விபத்து குறித்து காவல் துறையினர் விசாரணையும் நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: மேம்பால பணிகளில் சோகம்; கட்டுமான தொழிலாளி பாலத்தில் இருந்து தவறி விழுந்த பிலி.!