சமுத்திரக்கனியின் திரு. மாணிக்கம் படம் வெளியீடு தேதி; அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
கடலூர், விழுப்புரம் மாவட்ட பள்ளி-கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை; அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
வெள்ள அபாய எச்சரிக்கையுடன் மழையும் தொடருவதால் விழுப்புரம், கடலூரில் விடுமுறை அறிவிக்கப்ட்டுள்ளது.
பெஞ்சல் புயலின் தொடர் மழை காரணமாக, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்கள் கடும் சேதத்தை எதிர்கொண்டுள்ளன. மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
கெடிலம், சங்கராபரணி, தென்பெண்ணை ஆறு ஆகியவற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், கரையோர பகுதிகளுக்கு அபாய எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: #Breaking: திருவண்ணாமலையில் வீட்டில் மண்சரிந்த விவகாரம்; 3 பேரின் உடல்கள் மீட்பு.. உறவினர்கள் கதறல்.!
2 மாவட்டங்களில் விடுமுறை அறிவிப்பு
மாணவர்களின் நலன் கருதி பள்ளி - கல்லூரிகளுக்கு இன்று விடுப்பு வழங்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், டிசம்பர் 03, 2024ம் தேதியான நாளை விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் செயல்படும் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே புதுச்சேரியில் கொட்டித்தீர்த்த கனமழை காரணமாக பள்ளி-கல்லூரிகள் தற்காலிக முகாமாக செயல்படுவதால், அங்கு பள்ளி-கல்லூரிகளுக்கு விடுப்பு வழங்கப்பட்டு இருந்து குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: வெள்ளம் போனா என்ன? எங்களுக்கு சரக்குதான் முக்கியம் - டாஸ்மாக் கடையில் குவிந்த குடிமகன்கள்.!