#Breaking: திருவண்ணாமலையில் வீட்டில் மண்சரிந்த விவகாரம்; 3 பேரின் உடல்கள் மீட்பு.. உறவினர்கள் கதறல்.! 



  in Tiruvannamalai Land Slide 3 Body recovered

பெஞ்சல் புயலின் தொடர் மழை காரணமாக, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வ.உ.சி நகர் மலைப்பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் மலையை ஒட்டி இருந்த வீடுகள் மீது பாறைகள் விழுந்து,அவை மீது மண் மூடியது. 

மீட்பு பணிகள் தீவிரம்

பாறை, மணலால் மூடப்பட்ட வீட்டில் 7 பேர் இருந்ததாக தகவல் கிடைத்த நிலையில், தேசிய மீட்புப் படையினர், தீயணைப்பு படையினர், அரசு அதிகாரிகள் ஒன்றாக சேர்ந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். வீட்டில் சிக்கிய 7 பேரின் நிலை தெரியாமல் இருந்தது.

இதையும் படிங்க: வெள்ளம் போனா என்ன? எங்களுக்கு சரக்குதான் முக்கியம் - டாஸ்மாக் கடையில் குவிந்த குடிமகன்கள்.!

3 பேரின் சடலங்கள் மீட்பு

இந்நிலையில், நிலச்சரிவுக்கு அடியில் சிக்கி இருப்போரை மீட்க தேசிய பேரிடர் மீட்பு படையினர் திருவண்ணாமலை விரைந்த நிலையில், அவர்கள் பலமணிநேர போராட்டத்திற்கு பின்னர் 3 பேரின் உடலை சடலமாக மீட்டனர். பாறை உருண்டதில் வீடு இடிந்து விழுந்த அதற்குள் இவர்கள் சிக்கிக்கொண்டனர். 

Fengal Cyclone

4 பேரின் நிலை தெரியவில்லை

வீட்டில் புதைந்துபோன ராஜ்குமார்- மீனா தம்பதி மற்றும் அவரின் 2 குழந்தைகள் என 7 பேர் மொத்தமாக சிக்கிக்கொண்ட நிலையில், இவர்களில் 3 பேரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. எஞ்சியோர் உயிருடன் இருப்பார்களா? என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது.

உறவினர்கள் கதறல்

உயிரிழந்த நபர்களின் உறவினர்கள், தங்களின் சொந்தம் சடலமாக மீட்கப்பட்ட சோகத்தில் கதறி அழுதது காண்போரை சோகத்தில் ஆழ்த்தியது.

இதையும் படிங்க: வெள்ளத்தில் இழுத்து வரப்பட்ட மூதாட்டி; கயிறுகட்டி உயிரை காப்பாற்றிய பொதுமக்கள்.!