மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பேசி மயக்கிய கூலி தொழிலாளி... கர்ப்பமான 17 வயது சிறுமி.!! மீண்டும் ஒரு போக்சோ வழக்கு.!!
அரியலூர் மாவட்டத்தில் 17 வயது சிறுமி கர்ப்பமான வழக்கில் கூலித் தொழிலாளி கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக அந்த நபர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிறுமியுடன் காதல்
அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கோகுல்ராஜ் என்ற நபர் கூலி தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் கோகுல் ராஜுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இந்தப் பழக்கம் நாளடைவில் காதலாக மாறியிருக்கிறது. கோகுல்ராஜ் மற்றும் சிறுமி ஆகியோர் பல இடங்களுக்கும் ஒன்றாக சென்று வந்துள்ளனர்.
கர்ப்பமான சிறுமி
கோகுல்ராஜ் சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகளை கூறி உல்லாசமாக இருந்திருக்கிறார். இதனால் சிறுமி கற்பம் அடைந்துள்ளார். இந்த விஷயம் சிறுமியின் பெற்றோருக்கு தாமதமாகவே தெரிய வந்திருக்கிறது. மேலும் சிறுமி கர்ப்பமாக இருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்த அவர்கள் இது தொடர்பாக அரியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: காதல் கணவனுக்கு கள்ளத்தொடர்பு... விரக்தியில் மனைவி எடுத்த விபரீத முடிவு.!!
போக்சோவில் கைது
இதனைத் தொடர்ந்து விசாரணையில் இறங்கிய காவல்துறையினர் கோகுல்ராஜை கைது செய்தனர். மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில் சிறுமியை கர்ப்பம் ஆக்கியதை ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து அவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் கோகுல்ராஜை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவல்துறையினர் அவரை சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: கந்து வட்டி தகராறு... கொடூரமாக கொலை செய்யப்பட்ட பெண்.!! காவல்துறை தீவிர விசாரணை.!!