#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
லாரியை முந்திச்செல்ல முயன்று விபரீதம்; 7ம் வகுப்பு மாணவர் தாய் கண்முன் உடல் நசுங்கி பலி.!
சாலைகளில் பயணம் செய்வோர் ஒரு நிமிட தாமதத்தை நினைத்து அதிவேகமாக செல்வது விபத்திற்கு வழிவகை செய்யும்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி, காரமடை பகுதியில் வசித்து வருபவர் யோகேஷ் பாண்டியன் (வயது 13). சிறுவன் அங்குள்ள பகுதியில் செயல்பட்டு வரும் பள்ளியில் ஏழாம் வகுப்பு பயின்று வருகிறார்.
இதனிடையே, நேற்று யோகேஷ் பாண்டியனை, நேற்று அவரின் அம்மா தனது இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு அழைத்துச் சென்றுள்ளார். யமுனா தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.
இதையும் படிங்க: காதல் திருமணம்.. காதலனின் வீட்டை அடித்து நொறுக்கிய உறவினர்கள்.. திண்டுக்கலில் பரபரப்பு சம்பவம்.!
தாயின் கண்முன் நடந்த சோகம்
இவர்கள் இருவரும் சாலையில் பள்ளி நோக்கி சென்றுகொண்டு இருந்தபோது, முன்னாள் சென்ற லாரியை யமுனா முந்திச் செல்ல முற்பட்டுள்ளார். அப்போது இருசக்கர வாகனம் மீது லாரி எதிர்பாராத விதமாக மோதியுள்ளது.
இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி லாரியின் சக்கரத்திற்குள் விழுந்த சிறுவன், பரிதாபமாக உடல் நசுங்கி உயிரிழந்தார். இந்த விசயம் குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதையும் படிங்க: வேட்டையன் படம் ஓடிய திரையரங்கில் காலாவதியான பாப்கார்ன்; ரஜினி ரசிகர்கள் ஆவேசம்.!