96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
காதல் திருமணம்.. காதலனின் வீட்டை அடித்து நொறுக்கிய உறவினர்கள்.. திண்டுக்கலில் பரபரப்பு சம்பவம்.!
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர், கொன்னம்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் லட்சுமி (வயது 52). இவரின் மகன் கார்த்திக் (வயது 30), சென்னையில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனம் ஒன்றில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார்.
இதே ஊரில் வசித்து வரும் மாணவி திவ்யாபாரதி (வயது 20). இவர் சட்டக்கல்லூரி மாணவி ஆவார். இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில், இவர்களின் காதலுக்கு மாணவியின் பெற்றோர் எதிர்ப்பு கூறியுள்ளனர். இதனால் காதல் ஜோடி சென்னையில் உள்ள துரைப்பாக்கம் பகுதியில் இருக்கும் கோவிலில் திருமணம் செய்துகொண்டது.
வீட்டை அடித்து நொறுக்கிய உறவுகள்
பின் அங்குள்ள காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் புகுந்தது. இதனிடையே, காதல் ஜோடி திருமணம் செய்துகொண்ட தகவல் அறிந்த திவ்யபாரதியின் தந்தை சுப்பிரமணி, அவரின் தரப்பு உறவினர்கள் கார்த்திக்கின் வீட்டிற்கு சென்று வீட்டை சூறையாடினர்.
இதையும் படிங்க: வேட்டையன் படம் ஓடிய திரையரங்கில் காலாவதியான பாப்கார்ன்; ரஜினி ரசிகர்கள் ஆவேசம்.!
இந்த விஷயம் தொடர்பாக கார்த்திக்கின் தாய் லட்சுமி வேடசந்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை ஏற்ற காவல் துறையினர் சுப்பிரமணி, அவரின் மனைவி ஆனந்தி, சுப்பிரமணியன் உறவினர்கள் காவியா,சந்தோஷ், வளர்மதி, அரவிந்த் உட்பட 7 பேரின் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். விசாரணை தொடருகிறது.
இதையும் படிங்க: வேகத்தடையால் நிகழ்ந்த சோகம்; லாரி சக்கரத்தில் சிக்கி மகன், பேரன் கண்முன் தலை நசுங்கி பெண் பலி.!