ஏ.ஆர் ரகுமானுக்கு என்ன ஆனது? வெளியானது மருத்துவ அறிக்கை.. வீடு திரும்பினார்.!
காழ்புணர்ச்சியெல்லாம் இல்லிங்க.. ஆதங்கத்துல பேசிட்டேன்.. வருந்துகிறேன்.. - முன்னாள் திமுக பேச்சாளர் கிருஷ்ணமூர்த்தி.!

சென்னையில் உள்ள இராயபுரம் மேற்கு பகுதியில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டம் ஒன்றில், அக்கட்சியின் முன்னாள் பேச்சாளரான கிருஷ்ணமூர்த்தி என்பவர் கலந்துகொண்டு பேசினார். பின் அவர் பேசிய வீடியோ ஒன்று, அதிமுக உட்பட பிற கட்சியினரால் பகிரப்பட்டு, கிருஷ்ணமூர்த்தி இஸ்லாமிய மக்களுக்கு எதிராக பேசியதாக கூறப்பட்டது.
இந்த விஷயம் சர்ச்சையானதைத்தொடர்ந்து, அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். மேலும், கிருஷ்ணமூர்த்தி தனது சர்ச்சை பேச்சுக்களால் பிரபலமான நபராகவும் இருந்து வருகிறார்.
இதையும் படிங்க: பேருதான் தமிழ்மணி.. கையில நோ மணி.. கட்சி நிகழ்ச்சிக்கு கடைகடையாக மிரட்டல் வழிப்பறி.. லீக்கான வீடியோ.!
விஷமத்தனம் கொண்டு பரப்பினர்
அவர் பேசிய வீடியோவில், "வணக்கம். நான் திமுக பேச்சாளர் பேசுகிறேன். நேற்று முன்தினம் இராயபுரம் மேற்கு பொதுக்கூட்டத்தில், கலைஞர் இஸ்லாமிய மக்களுக்கு எந்தெந்த நன்மையை செய்கிறார் என பேசினேன். அப்போது, முஸ்லீம் மக்களால் தனக்கு அச்சுறுத்தல் உள்ளது என்று கூறி, விஜய் பேசியது தொடர்பாக நான் பேசினேன். அதனை சிலர் விஷமத்தனம் கொண்டு அவதூறாக பரப்பினர்.
என் அன்பு இஸ்லாமிய உறவுகளே...
— Sivaji Krishnamurthy (@Sivajikm_offl1) March 16, 2025
நான் பேசிய கருத்தை வேறுவிதமாக எதிர்க்கட்சிகள் திரித்து பரப்புகின்றனர்.
நான் பயன்படுத்திய வார்த்தை உங்கள் மனதை காயப்படுத்தி இருந்தால் வருத்தம் தெரிவிக்கிறேன்🙏 pic.twitter.com/i4l3YXuDfS
நான் வாழ்வது முஸ்லீம் மக்கள் நிறைந்த பகுதி. முஸ்லீம் மக்கள் மீது எனக்கு எந்த விதமான காழ்ப்புணர்ச்சி, வெறுப்பு இல்லை. ஆதங்கத்தில் கேட்டேன். அந்த விஷயத்தில் எனது வார்த்தை தடுமாறி யாரேனும் வருத்தம் அடைந்தால், நானும் என் வருத்தத்தை பதிவு செய்கிறேன்" என கூறினார்.
இதையும் படிங்க: #Breaking: திமுகவினர் கொழுக்க சுரண்டப்படும் மாநிலத்தின் வளங்கள் - அண்ணாமலை கடும் தாக்கு.!