பேருதான் தமிழ்மணி.. கையில நோ மணி.. கட்சி நிகழ்ச்சிக்கு கடைகடையாக மிரட்டல் வழிப்பறி.. லீக்கான வீடியோ.!



IN VILUPPURAM DMK mAN ASKING mONEY

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சாலை சந்திப்பில், வடமாநிலத்தை சேர்ந்த நபர் செல்போன் கடை நடத்தி வருகிறார். இந்த கடைக்கு சம்பவத்தன்று சென்ற நபர், தன்னை திமுக பிரமுகர் என அறிமுகம் செய்தார்.

மேலும், விழுப்புரத்திற்கு அமைச்சர், மாவட்ட செயலாளர் ஆகியோர், தண்ணீர் பந்தல் திறப்பு நிகழ்ச்சிக்கு வருகிறார். அதற்கு ரூ.10000 பணம் வேண்டும்.

இதையும் படிங்க: செஞ்சி: துக்க வீட்டுக்கு வந்த கணவன்-மனைவி, மகளுக்கு அரசுப் பேருந்து வடிவில் வந்த எமன்; மூவரும் சம்பவ இடத்திலேயே பலி..!

சிசிடிவி காட்சிகள் லீக் 

பணம் கொடுக்கவில்லை என்றால் கடையை இழுத்து மூடிவிடுவேன். நானே வந்து பூட்டுபோடுவேன் என மிரட்டி இருக்கிறார். இந்த விஷயம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

இந்த விஷயம் தொடர்பாக வெளியாகியுள்ள தகவலில், சம்பந்தப்பட்ட செயலில் ஈடுபட்டது திமுக பிரமுகர் தமிழ்மணி என்பது தெரியவந்தது. தற்போது தமிழ்மணியின் செயலுக்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது.

 

இதையும் படிங்க: கொள்ளை வழக்கில் சிறை சென்றவருடன் 16 வயது சிறுமி காதல்.. திருட்டு கைதி போக்ஸோவில் கைது.!