மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பாலியல் புகார் மீதான விசாரணை வளையத்தில் தி.மு.க பிரமுகரின் மகன்..!
விருதுநகர் மாவட்டம், நரிக்குடி அருகேயுள்ள வீரக்குடியைச் சேர்ந்த தி.மு.க பிரமுகரான முன்னாள் ஊராட்சி தலைவர் மகன் ஹரிகிருஷ்ணன் (27). விவரது தாயார் பாண்டியம்மாள். அதே ஊரை சேர்ந்த இளம்பெண் (27). இவர் தன் வீட்டிலுள்ள மாடு, கன்றுகளை பராமரித்து வருகிறார்.
இந்த நிலையில், சம்பவத்தன்று தனது வீட்டிலுள்ள கன்றுக்குட்டிகளை வயல் வெளியில் மேய்த்துவிட்டு பொழுது சாய்ந்ததால் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் பதுங்கியிருந்த ஹரிகிருஷ்ணன், இளம் பெண்ணை பின்னால் சென்று கட்டிப்பிடித்து அவரை பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண் அலறிய சத்தத்தில் பயந்து போன ஹரிகிருஷணன் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். பின்னர் இந்த சம்பவம் குறித்து ஹரிகிருஷ்ணனின் தாயார் பாண்டியாம்மாளிடம் முறையிட்ட இளம்பெண்ணை அவர் தகாத வார்த்தைகளை கூறி திட்டியதோடு இதனை வெளியில் கூறினால் கொலை செய்துவிடுவதாக மிரட்டியுள்ளார்.
இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து நரிக்குடி காவல் நிலையத்தில் இளம்பெண் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில், ஹரிகிருஷ்ணன் மீது பாலியல் வங்கொடுமை வழக்கும், பாண்டியம்மாள் மீது அவதூறு மற்றும் கொலை மிரட்டல் வழக்குகளை பதிவு செய்த காவல்துறையினர், இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.