மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பாஜகவின் 'C' டீம் தான் விஜயின் தவெக.. திமுக அமைச்சர் பரபரப்பு பேச்சு.!
திமுகவின் கூட்டணியை யாராலும் அசைக்க முடியாது. மு.க ஸ்டாலினின் பாசத்தை மீறி யாரும் செல்லமாட்டார்கள் என அமைச்சர் பேசினார்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி, வி.சாலை பகுதியில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கொள்கை அறிவிப்பு மாநாடு நடைபெற்றது. இலட்சக்கணக்கான தொண்டர்கள் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அக்கட்சியின் தலைவர் விஜய் தனது கொள்கை, கோட்பாடு எதிரிகளாக பிளவுவாத அரசியல், ஊழல் போன்றவற்றை எதிர்த்து, திமுக, பாஜகவை மறைமுகமாக நகையாடி இருந்தார். மேலும், திராவிட அரசியல் எனும் பிம்பத்தையும் தாக்கி பேசி இருந்தார்.
அமைச்சர் ரகுபதி
இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த திமுக அமைச்சர் ரகுபதி, "திராவிட மாடல் ஆட்சியின் கொள்கையை, தமிழக மக்களிடம் இருந்து அகற்ற இயலாது. நேற்று அவர்கள் வெளியிட்டுள்ளதே எங்களின் கொள்கைகளுடைய ஜெராக்ஸ். ஆகையால், அதற்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் கொடுத்து வரும் திராவிட மாடல் ஆட்சியை, தமிழக மக்களிடம் இருந்து அகற்றிவிட முடியாது, பிரித்துவிட முடியாது.
இதையும் படிங்க: தவெக முதல் மாநாடு.. விபத்து, மாரடைப்பில் பலியான உயிர்கள்..!
பாஜகவின் சி-டீம்
முதல்வர் முக ஸ்டாலின் உழைப்புக்கு எடுத்துக்காட்டு. அவர் உலகமே உற்றுநோக்கி காலை உணவுத்திட்டம் உட்பட பலவற்றை தந்துள்ளார். அவருக்கு தமிழக மக்களின் இதயத்தில் இடம் உண்டு. உழைப்பின் மற்றொரு உருவமாக துணை முதல்வர் இருக்கிறார். நாங்கள் மக்களுக்காக இரவு-பகல் பாராமல் உழைப்பவர்கள். பல அரசியல் கட்சிகளின் ஏ-டீம், பி-டீம் பார்த்துள்ளோம், தவெக பாஜகவின் சி-டீம் ஆகும்.
ஸ்டாலினின் பாசம்
தமிழக மக்களின் வெறுப்புக்கு ஆளாகி இருக்கும் ஆளுநரை எதிர்த்து பேசினால் மட்டுமே அரசியல் ஈடுபடும் என விஜய் பேசியுள்ளார். முழுக்க முழுக்க இது பாஜகவின் சி-டீம். மக்களை சந்தித்து, வாக்குகளை பெற்று ஆட்சிக்கு வரட்டும் பார்த்துக்கொள்ளலாம். திமுகவின் கூட்டணியை யாராலும் அசைக்க முடியாது. மு.க ஸ்டாலினின் பாசத்தை மீறி யாரும் செல்லமாட்டார்கள். அதிமுக தொண்டர்களை தன்பக்கம் இழுக்க தவெக செயல்பட்டு வருகிறது. இதனால் தவெக பாஜகவுக்கு வலுவூட்டும்.
ஊழலைப்பற்றி பேசவேண்டும் என்றால் 2021ல் இருந்து பேச முடியாது. நாங்கள் யாருக்கும் அதற்கான வாய்ப்புகள் கொடுக்கவில்லை. பழுத்த பழமான திமுகவை பற்றி பேசினால் மட்டும்தான் தமிழ்நாட்டில் அரசியல் செய்ய முடியும் என விஜய் பேசி இருக்கிறார் " என பேசினார்.
இதையும் படிங்க: #Breaking: மேடைக்கு வந்து திடீரென கண்கலங்கிய விஜய்.. விக்ரவாண்டியை அதிரவைத்த தவெக தலைமகன்.!