மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#Breaking: மேடைக்கு வந்து திடீரென கண்கலங்கிய விஜய்.. விக்ரவாண்டியை அதிரவைத்த தவெக தலைமகன்.!
2026 சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொண்டு, தமிழக மக்களுக்கு தொண்டாற்ற விரும்பி அரசியலில் களமிறங்கியுள்ள நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டை இன்று விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்ரவாண்டியில் வைத்து நடத்துகிறார். இந்த மாநாட்டில் கட்சியின் கொள்கை, தீர்மானங்கள் உட்பட பல்வேறு விஷயங்கள் தொடர்பாக அறிவிக்கப்படவுள்ளன.
தவெக கட்சியின் முதல் மாநில மாநாடு சிறக்க,.
— VijaySethupathi (@VijaySethuOffl) October 27, 2024
தவெக தலைவர் விஜய் சாருக்கும், தொண்டர்களுக்கு
வாழ்த்துகள் #TVK_maanadu pic.twitter.com/dk9hU9wSDy
இதையும் படிங்க: நாளை விக்கிரவண்டியில் மழை பெய்யுமா? டெல்டா வெதர்மேன் முக்கிய எச்சரிக்கை... தவெக நிர்வாகிகளே உஷார்.!
கழுத்தில் துண்டை போட்ட விஜய்
இந்நிலையில், நடிகர் விஜய் அரங்கத்தின் மண் ஏற்படுத்தப்பட்டு இருந்த ரேம்ப்பில் நடந்து தொண்டர்களுக்கு மரியாதை செலுத்தினார். விஜய் வரும்போது கட்சிக்கொடி இன்றி வருகைதந்த நிலையில், தொண்டர்கள் தங்களின் கைகளில் இருந்த கட்சிக்கொடியை தூக்கியெறிந்தனர். அதனை நடிகர் விஜய் தனது கழுத்தில் போட்டுகொண்டு தொடர்ந்து நடந்து சென்றார். இதனால் தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
Over-view of Maanadu 🔥🔥🔥#TVKVijayMaanadu pic.twitter.com/j5Jara4aZf
— TVK Vijay Trends (@TVKVijayTrends) October 27, 2024
கண்கலங்கிய விஜய்
மேலும், தொண்டர்கள் ஆய்த மிகப்பெரிய வரவேற்பு காரணமாக, தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் கண்கலங்கிப்போனார். மாலை 4 மணிக்கு மேல் நிகழ்ச்சிகள் தொடங்கியுள்ள நிலையில், இரவு 08:00 மணிக்குள் நிகழ்ச்சிகள் நிறைவுபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: #Breaking: "செயல்மொழியே நமது அரசியல்" - தவெக விஜய் அதிரடி அறிக்கை.!