மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
விமானப்படை சாகச மரணங்கள்: கும்பகோணத்தை இழுக்கும் ஆர்.எஸ் பாரதி.. எதிர்க்கட்சிகளின் கேள்விக்கு சரமாரி விளாசல்.!
கும்பகோணத்தில் 2 பேர் குளித்தபோது, அங்கிருந்த நீரில் மூழ்கி 100 பேர் உயிரிழந்து இருந்தனர் என ஆர்.எஸ் பாரதி விமர்சித்தார்.
இந்திய விமானப்படையின் 92 வது ஆண்டு விமானப்படை விழா, சென்னை மெரினா கடற்கரையில் வைத்து நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 15 இலட்சம் மக்கள் முன்பு வான் சாகசங்கள், தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கை போன்ற காட்சிகள் தத்ரூபமாக செய்து காண்பிக்கப்பட்டன.
இதையும் படிங்க: #Breaking: சனாதனம் குறித்த பேச்சு.. ஆந்திர துணை முதல்வருக்கு உதயநிதி ஸ்டாலின் பதில்.!
இந்த நிகழ்ச்சிக்கு விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை மக்கள் பெருவாரியாக அணிந்திரண்டு சென்று இருந்தனர். இதனால் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மெரினாவில் இருந்த கடைகள் அப்புறப்படுத்தப்பட்டதால், மக்கள் தண்ணீர் கூட வாங்க இயலாமல் அவதிப்பட்டனர்.
இதனால் உடலில் நீரிழப்பு ஏற்பட்டு 5 பேர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். 105 க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இந்த விஷயம் எதிர்கட்சிகளால் கடமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியனும் இதுதொடர்பாக விளக்கம் அளித்து, இதனை அரசியலாக்க வேண்டாம் என கோரிக்கை வைத்திருந்தார்.
ஆர்.எஸ் பாரதி பதிலடி
இந்நிலையில், திமுக அமைப்புச் செயலாளர், எம்.பி ஆர்.எஸ் பாரதி எதிர்கட்சிகளின் கண்டனத்திற்கு பதிலடி விமர்சனம் கூறியுள்ளார். அதாவது, அவர் இந்த விஷயம் குறித்து அளித்த பேட்டியில், "கும்பகோணத்தில் முன்னதாக 2 பேர் குளித்தபோது, 100 பேர் உயிரிழந்து இருந்தனர். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிரச்சாரக்கூட்டத்தில் பங்கேற்றவர்கள் 6 பேர் உயிரிழந்தனர்.
அரசின் சார்பில் குடிநீர் வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டு இருந்தது. உடல்நலம் சரியில்லாதவர்கள் அங்கு சென்றிருக்கக்கூடாது. அஜாக்கிரதை காரணமாகவே இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன" என பேசினார். ஆர்.எஸ் பாரதி பேசிய காணொளி இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
" கும்பகோணத்தில் கூட தான் 2 பேர் குளித்த போது 100 பேர் இறந்தார்கள்.. " ஜெ., தேர்தல் பிரச்சாரத்தில் கூட 6 பேர் இறந்தார்கள்.. குடிநீர் வசதி ஏற்படுத்தி தான் கொடுத்திருந்தோம்.. உடல்நிலை சரியில்லாதவர்கள் போயிருக்க கூடாது.. அஜாக்கிரதையால் ஏற்பட்டது தான் இந்த உயிரிழப்பு.. வான் சாகச… pic.twitter.com/sV2RLyMU9s
— Polimer News (@polimernews) October 7, 2024
Video Thanks: Polimer News
கடந்த 1992 ம் ஆண்டு கும்பகோணம் மகாமகத்தில் ஜெயலலிதா கலந்துகொண்டபோது கூட்டநெரிசலில் சிக்கி நீரில் மூழ்கி 48 பேர் உயிரிழந்தனர், 60 க்கும் அதிகமானோர் பாதிப்பு அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: "கனிமொழி எம்.பி. பி.ஏ. யாருண்ணே தெரியாது" - போதை தெளிந்ததும் அடாவடி யூத் அப்ரூவர்.!