மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#Breaking: சனாதனம் குறித்த பேச்சு.. ஆந்திர துணை முதல்வருக்கு உதயநிதி ஸ்டாலின் பதில்.!
ஆந்திர துணை முதல்வரின் பேச்சுக்கு, தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி பதில் வழங்கி இருக்கிறார்.
விரதமும்-பாதயாத்திரை பயணமும்
திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோவிலில் வழங்கப்படும் லட்டு தயாரிக்கும் பணியில் பயன்படுத்தப்படும் நெய்யில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இந்த விஷயம் குறித்து விசாரணை நடந்து வரும் அதே வேளையில், அம்மாநில துணை முதல்வர் பவன் கல்யாண், சிறப்பு பூஜைக்காக விரதம் இருந்து திருப்பதி கோவிலுக்கு அடிவாரத்தில் இருந்து பாதை யாத்திரை பயணமும் மேற்கொண்டு இருந்தார்.
இதையும் படிங்க: "கனிமொழி எம்.பி. பி.ஏ. யாருண்ணே தெரியாது" - போதை தெளிந்ததும் அடாவடி யூத் அப்ரூவர்.!
பவன் கல்யாண் பேச்சு
இதனிடையே, நேற்று ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தின் துணை முதல்வர் பவன் கல்யாண், சனாதனத்தை அழிக்க நினைப்பர்வர்கள் அழிந்து போவார்கள் என பேசி இருந்தார். இந்த விஷயம் குறித்து தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பி இருந்தனர்.
உதயநிதி ஸ்டாலின் பதில்
இந்த கேள்விக்கு பதில் அளித்த துணை முதல்வர் உதயநிதி, "பொறுத்திருந்து பாருங்கள்" என கூறினார். தமிழ்நாட்டை பொறுத்தமட்டில் திமுக மற்றும் அதன் கூட்டணிக்கட்சிகள் சனாதன கொள்கை எதிர்ப்பில் தீவிரமாக இருந்து வருகின்றன. இதனிடையே, ஆந்திர முதல்வர் சனாதனத்தை அழிக்க நினைப்போர், அழிந்து போவார்கள் என பேசி இருக்கிறார்.
இதையும் படிங்க: #Breaking: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு உடல்நலக்குறைவு; மருத்துவமனையில் அனுமதி.!