லோகோ பைலட் தேர்வில் தமிழர்களை வஞ்சிக்கும் செயல்? வெளிமாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கீடு.. இபிஎஸ் குற்றசாட்டு.!



Edappadi Palanisamy Request to Central Govt on Logo Pilot 2nd Exam Center Announcement 

 

தென்னக இரயில்வேயில், உதவி பைலட் தேர்வின் முதற்கட்டம் நடைபெற்று முடிந்த நிலையில், மார்ச் 19, 2025 அன்று இரண்டாம்கட்ட தேர்வு நடைபெறுகிறது. இந்த தேர்வுக்காக காத்திருந்தவர்களுக்கு சமீபத்தில் தேர்வு மையங்கள் தொடர்பான அறிவிப்பு வெளியாகியது. அதன்படி, தேர்வர்களுக்கு தெலுங்கானா, ஆந்திரா என வெளிமாநிலங்களில் மையம் ஒதுக்கப்பட்டுள்ளது. இது தேர்வர்களுக்கு அதிருப்தியை உண்டாக்கி இருக்கிறது. இதனிடையே, தேர்வு மையங்களை தமிழ்நாட்டில் மாற்றி உத்தரவிட வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள எக்ஸ் வலைப்பதிவில், "தெற்கு ரயில்வேயில் உதவி லோகோபைலட் பணியிடங்களுக்கான 2ம் கட்டத் தேர்வு வரும் மார்ச் 19 அன்று நடைபெறவுள்ள நிலையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 90% தேர்வர்களுக்கு தெலங்கானா மாநிலத்தில் மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கிறது.

இதையும் படிங்க: "சரியான பாதையில் செல்கிறேன்" - கே.ஏ செங்கோட்டையன் பரபரப்பு பேச்சு.. அதிர்ச்சியில் அதிமுக வட்டாரம்.!

மத்திய அரசுக்கு கோரிக்கை

1000 கி.மீ. க்கு அப்பால் சென்று தேர்வு எழுதுவது தேர்வர்களுக்கு மிகுந்த சிரமத்தை அளிக்கும். மேலும், இதுபோன்ற குளறுபடிகள் ரயில்வே உள்ளிட்ட மத்திய அரசுப்பணிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞர்கள் அதிக அளவில் சேரவேண்டும் என்ற உந்துதலைக் குறைத்துவிடும் என்பதையும் மத்திய அரசு உணரவேண்டும்.

எனவே, தேர்வர்களின் கோரிக்கையினைக் கருத்திற் கொண்டு, தமிழ்நாட்டுத் தேர்வர்களுக்கான மையங்களை தமிழ்நாட்டிலேயே ஒதுக்கீடு செய்யுமாறு மத்திய அரசையும், தெற்கு ரயில்வே நிர்வாகத்தையும் வலியுறுத்துகிறேன்" என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

 

இதையும் படிங்க: #Breaking: எடப்பாடி பழனிச்சாமி Vs செங்கோட்டையன் விவகாரம்; இபிஎஸ் பரபரப்பு பேட்டி.!