மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"ஐயோ மோசம் போயிட்டோமே.." மூதாட்டி கொலையில் திடீர் திருப்பம்.!! அதிர்ச்சியில் கொள்ளையர்கள்.!!
ராமநாதபுரம் மாவட்டத்தில் நகைக்காக மூதாட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் இந்த கொலை சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அதிர்ச்சியளிக்கும் உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
மூதாட்டி கொலை மற்றும் நகை பறிப்பு
ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே உள்ள நாரையூரணி கிராமத்தைச் சேர்ந்தவர் மூதாட்டி லட்சுமி. இவர் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை வீட்டில் தனியாக இருந்திருக்கிறார். அப்போது அங்கு வந்த மர்ம கும்பல் மூதாட்டியை தாக்கி கொலை செய்துவிட்டு அவர் அணிந்திருந்த நகைகளை பறித்துச் சென்றிருக்கிறது.
காவல்துறை விசாரணை
இந்த கொலை சம்பவம் தொடர்பாக பொதுமக்கள் கொடுத்த தகவலையடுத்து மூதாட்டியின் வீட்டிற்கு சென்ற காவல்துறையினர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கொலை மற்றும் நகை பறிப்பு சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். போலீஸின் முதல் கட்ட விசாரணையில் அதிர்ச்சியளிக்கும் உண்மை வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.
இதையும் படிங்க: செல்லூரில் பயங்கரம்... போதையில் எகிறிய மகன்.!! கிரைண்டர் கல்லால் அடித்து கொலை.!!
திருடி செல்லப்பட்ட கவரிங் நகைகள்
காவல்துறை விசாரணையில் மூதாட்டியிடம் இருந்து பறித்துச் செல்லப்பட்டது கவரிங் நகைகள் என தெரிய வந்திருக்கிறது. தங்க நகைகள் என நினைத்து கொள்ளையர்கள் மூதாட்டியை கொன்றுவிட்டு நகையைப் பறித்துச் சென்றுள்ளனர். ஆனால் காவல்துறையின் விசாரணையில் தற்போது உண்மை வெளியாகி இருக்கிறது. மேலும் தலைமறைவான குற்றவாளிகளை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் நகைக்காக மூதாட்டிகள் குறிவைத்து தாக்கப்படுவது அப்பகுதியில் உள்ள மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இதையும் படிங்க: விபச்சார விடுதிகளின் கூடாரமாக வேலூர்? சிக்கப்போகும் அரசியல்கட்சி புள்ளிகள், மாமூல் போலீசார்..!