மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
செல்லூரில் பயங்கரம்... போதையில் எகிறிய மகன்.!! கிரைண்டர் கல்லால் அடித்து கொலை.!!
மதுரையில் குடிபோதையில் தகராறு செய்த மகன் தலையில் தந்தையே, கிரைண்டர் கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக சரணடைந்த நபரிடம் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.
போதைக்கு அடிமையான மகன்
மதுரை மாவட்டம் செல்லூரில் வசித்து வருபவர் வாசுதேவன். இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் இவரது இரண்டாவது மகனான லட்சுமணன் என்பவர் மதுப்பழக்கத்திற்கு அடிமையானவராக இருந்திருக்கிறார். மேலும் தினமும் குடித்து விட்டு வந்து வீட்டிலும் அக்கம் பக்கத்திலும் தகராறு செய்ததாக தெரிகிறது.
கிரைண்டர் கல்லை தலையில் போட்டு கொலை
இந்நிலையில் நேற்று வழக்கம் போல் மது குடித்துவிட்டு வந்த லட்சுமணன் தனது வீட்டில் தகராறு செய்ததாக தெரிகிறது. இது தொடர்பாக வாசுதேவனுக்கும் அவரது மகனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது. அப்போது கோபத்தின் உச்சிக்கே சென்ற வாசுதேவன் வீட்டிலிருந்த கிரைண்டர் கல்லை எடுத்து தனது மகன் தலையில் போட்டு கொடூரமாக கொலை செய்திருக்கிறார்.
இதையும் படிங்க: விபச்சார விடுதிகளின் கூடாரமாக வேலூர்? சிக்கப்போகும் அரசியல்கட்சி புள்ளிகள், மாமூல் போலீசார்..!
போலீசில் சரண்
தனது மகனை கொலை செய்த பின்பு காவல் நிலையம் சென்ற வாசுதேவன் போலீஸாரிடம் சரணடைந்தார். இதனைத் தொடர்ந்து அவரது வீட்டிற்கு சென்ற காவல்துறையினர் இறந்த லட்சுமணன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சரணடைந்த வாசுதேவன் மீது கொலை வழக்கு பதிவு செய்த காவல்துறை தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பதட்டத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.
இதையும் படிங்க: காந்த குரலில் கவர்ச்சி பேச்சு.. சல்லாப எண்ணத்துடன் சென்ற தொழிலதிபரை கற்பழித்து கபளீகரம் செய்த கும்பல்..!