ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியா? மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பதில்.!



Erode East TN Assembly Constituency By Election 

 

 

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதியின் உறுப்பினராக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் இயற்கை எய்தியதைத்தொடர்ந்து, அத்தொகுதி கலியானதாக அறிவிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து, இன்று தேர்தல் ஆணையம் டெல்லி மாநில சட்டப்பேரவை தேர்தலுடன், காலியானதாக அறிவிக்கப்பட்ட ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: யுஜிசி நெட் தேர்வு தேதிகளை மாற்றுங்கள் - தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின் கோரிக்கை.!

இடைத்தேர்தல் & டெல்லி மாநில தேர்தல் அறிவிப்பு

அதன்படி, ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்கு வரும் பிப்ரவரி மாதம் 05ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. பிப். 08 அன்று தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும். டெல்லி மாநிலத்திற்கும் அதேபோல தேர்தல் நடந்து, பிப்.08 முடிவு வெளியாகும். இதனிடையே, ஈரோடு கிழக்கு தேர்தல் தொடர்பாக தமிழக அரசியல் கட்சிகள் போட்டியிட ஆயத்தமாகி வருகின்றன.

கட்சிகளுக்குள் பேச்சுவார்த்தை / ஆலோசனை தொடக்கம்

தமிழ்நாடு பாஜக ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதொடர்பாக ஆலோசனை கூட்டம் வரும் நாட்களில் அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடக்கிறது. அதேபோல, அதிமுக சார்பில் இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஆலோசிக்க ஜன.11 அன்று மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. காங்கிரஸ் தரப்பில் இடைத்தேர்தல் குறித்து கூறுகையில், அக்கட்சியின் தலைமை, கூட்டணி கட்சியோடு பேச்சுவார்த்தை நடத்தி முடிவு அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. 

இதையும் படிங்க: 14 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை; வீட்டிற்கு அழைத்துச்செல்வதாக கூறி கொடுமை.!