Toxic: யாஷ் பிறந்தநாள் கொண்டாட்டம்.. டாக்சிக் படத்தின் அசத்தல் கிலிம்ப்ஸ் வீடியோ.!
14 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை; வீட்டிற்கு அழைத்துச்செல்வதாக கூறி கொடுமை.!
ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் பகுதியில், 9ம் வகுப்பு மாணவர் பயின்று வருகிறார். இவர் நேற்று வழக்கம்போல பள்ளிக்குச் சென்றார்.
பின் மீண்டும் அவர் வீட்டிற்கு திரும்பிக்கொண்டு இருந்தார். அப்போது, உள்ளூரில் இருந்த கார்த்திக் என்பவர், சிறுவனை வீட்டிற்கு அழைத்துச் செல்வதாக இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளார். இதையும் படிங்க: குடும்பத்தினர் கண்முன் மின்னல் தாக்கி சோகம்; துக்க வீட்டிற்கு வந்த 25 வயது இளைஞர் பெற்றோர் கண்முன் பலி.!
பாலியல் தொல்லை
பின், தனிமையான பகுதிக்கு சிறுவனை அழைத்துச் சென்றவர், பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அவரிடம் இருந்து தப்பி வீட்டிற்கு வந்த சிறுவன், பெற்றோரிடம் தகவல் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, பெற்றோர் சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல்துறையினர், சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கார்த்திகை போக்ஸோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: அட பாவமே... மனைவி, குழந்தைகள் மீது கொலை முயற்சி.!! மது பிரியர் வெறி செயல்.!!