திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
கொலையில் முடிந்த தகராறு... வெட்டி சாயக்கப்பட்ட கட்டிட தொழிலாளி.!! தந்தை, மகன்கள் கைது.!!
விருதுநகர் மாவட்டத்தில் கட்டிட வேலை செய்து வந்த கூலித் தொழிலாளி கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக மீன் வியாபாரி மற்றும் அவரது மகன்களை கைது செய்துள்ள காவல் துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.
கட்டிடத் தொழிலாளி
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள நாராயணபுரம், பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜசேகர்(39). இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் இவருக்கும் இவரது பக்கத்து வீட்டில் வசித்து வரும் மீன் வியாபாரியான விநாயகமூர்த்தி என்பவரது குடும்பத்திற்கும் இடையே நீண்ட நாட்களாக பகை இருந்து வந்திருக்கிறது.
குடும்பத்தகராறில் வெட்டிக்கொலை
இந்நிலையில் நேற்று இரவு ராஜசேகர் மற்றும் விநாயகமூர்த்தி குடும்பத்தார் இடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது. இந்த தகராறு முற்றிய நிலையில் விநாயகமூர்த்தி மற்றும் அவரது மகன்களான வைர பிரகாசம், விக்ரம் ஆகியோர் சேர்ந்து கொடூரமாக வெட்டியதில் ராஜசேகர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து பலியானார். இதனைத் தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: சேலம்: 2 குழந்தைகளை கொலை செய்துவிட்டு தாய் தற்கொலை.!! விசாரணையில் வெளியான உண்மை.!!
தந்தை, மகன் உட்பட மூவர் கைது
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் கொலை செய்யப்பட்ட ராஜசேகரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கொடூர சம்பவம் தொடர்பாக கொலை வழக்கு பதிவு செய்த காவல்துறை விநாயகமூர்த்தி மற்றும் அவரது மகன்களான வைர பிரகாசம், விக்ரம் ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகிறது. குடும்பத் தகராறில் கட்டிட தொழிலாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பதட்டத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.
இதையும் படிங்க: தமிழகத்தில் பயங்கரம்... 3 நாட்கள் கற்பழிப்பு,! கூலி தொழிலாளிக்கு நேர்ந்த கொடூரம்.!! .!