#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் எம்எல்ஏ காலமானார்!அரசியல்கட்சியினர் இரங்கல்.!
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அய்யலுசாமி உடல்நலக்குறைவால் காலமானார்.அவருக்கு வயது 92. இவரது மறைவுக்கு பல்வேறு அரசியல்கட்சியினர் இரங்கல் தெரிவித்துதெரிவித்து வருகின்றனர்.
1996 முதல் 2001 வரை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் எம்எல்ஏவாக இருந்தவர் அய்யலுசாமி. இந்திய கம்யூனிஸ்ட் மாநில குழு உறுப்பினராகவும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செயலாளராகவும் பொறுப்புகள் வகித்துள்ளார்.
வயது முதிர்வு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த அய்யலுசாமி சொந்த ஊரான பெருமாள் பட்டியில் உள்ள அவரது வீட்டில் அதிகாலை உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் நேரில் சென்று இரங்கல் தெரிவித்துள்ளனர். அவரது இறுதி சடங்கு இன்று மாலை 5 மணி அளவில் அவரது சொந்த ஊரில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.