"அய்யோ திருமணமா.?! எப்பவுமே இல்ல" பொன்னியின் செல்வன் நடிகை.. பகீர் அறிவிப்பு.!
18 வது நாளாக ஒகேனக்கல் காவேரி ஆற்றில் குளிக்க, பரிசல் இயக்க தடை; நீர்வரத்து அதிகரிப்பால் நடவடிக்கை.!
தென்மேற்குப்பருவமழை கர்நாடக மாநிலத்தின் காவேரி நீர்ப்பிடிப்பு பகுதியில் தீவிரமடைந்துள்ளது. இதனால் காவேரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
கர்நாடக மாநிலத்தில் இருந்து காவேரி நீர் வரும் தமிழக எல்லையான ஒகேனக்கல் பகுதியில் நீர்வரத்து தொடர்ந்து 1.70 இலட்சம் கன அடி நீராக இருக்கிறது.
தொடரும் தடை
கடந்த 18 நாட்களாக தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வந்த நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒகேனக்கல் காவேரி ஆற்றில் பரிசல் இயக்கம், சுற்றுலாப்பயணிகள் நீராட தடை விதிக்கப்பட்டு இருந்தது.
இதையும் படிங்க: "கொலைகள் நடக்கத்தான் செய்யும். ஆனால்.," - சபாநாயகர் அப்பாவு பரபரப்பு பேட்டி.!
இந்த தடை தொடர்ந்து 18 வது நாளாக நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. அதேபோல, சேலம் மாவட்டம் மேட்டூர் அணையும் நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் காவேரி கரையோரத்தில் இருகரையையும் தொட்டபடி வெள்ளம் செல்கிறது.
தாழ்வான இடங்களில் உள்ள மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அரசு சார்பில் அறிவருத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அப்படிப்போடு; குடை எடுத்துட்டு வெளியே போனீங்களா?.. 10 மாவட்டங்களில் மதியம் 1 மணிவரை மழை..!