திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
அப்படிப்போடு; குடை எடுத்துட்டு வெளியே போனீங்களா?.. 10 மாவட்டங்களில் மதியம் 1 மணிவரை மழை..!
தமிழ்நாட்டில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் தென்மேற்குப்பருவமழை தீவிரத்தின் காரணமாக இன்று மழைக்கான சாதக வாய்ப்புகள் இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது.
அதேபோல, இன்று பல மாவட்டங்களில் தரைக்காற்று வீசும், வங்கக்கடல் பகுதியிலும் சூறாவளிக்காற்று வீசும். இதனால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கப்பட்டு இருந்தது.
இதையும் படிங்க: 11 மாவட்டங்களில் இரவு 10 மணிவரை வெளுக்கப்போகும் மழை; சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!
10 மாவட்டங்களில் மழை
இந்நிலையில், காலை 10 மணிமுதல் மதியம் 1 மணிவரையில் நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, நெல்லை, குமரி, திருப்பூர், திண்டுக்கல், விருதுநகர், தூத்துக்குடி மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: #Breaking: காவேரி கரையோர 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை; மறந்தும் அந்த பக்கம் போயிடாதீங்க.!