திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
ஷேர் மார்க்கெட்டில் 13 லட்சம் இழப்பு.!! விஷம் குடித்து உயிரை மாய்த்து கொண்ட ஓட்டல் உரிமையாளர்..!!
திருப்பூரை சேர்ந்த பார்த்தசாரதி என்பவர் கொங்கு மெயின் ரோட்டில் ஹோட்டல் ஒன்றை வைத்து நடத்தி வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி இரண்டு மகள்கள் உள்ளனர். இவர் பங்கு சந்தையில் முதலீடு செய்வதற்காக வங்கியில் 10 லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார்.
இந்த கடனை பார்த்தசாரதியால் அடைக்க முடியவில்லை. இதனால் அவர் வாங்கிய கடனை குடும்பத்தினர் தான் அடைத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் மேலும் ஒரு மூன்று லட்சம் பங்கு சந்தையில் முதலீடு செய்வதற்காக கடன் பெற்றுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
பின்னர் அதிலும் நஷ்டம் அடைந்ததால், மிகவும் மன அழுத்தத்திற்கு ஆளாகினார் பார்த்தசாரதி. கடனை திரும்ப கட்ட முடியாமல் தவித்துள்ளார். இதனால் வங்கி ஊழியர்கள் அவரது வீட்டிற்கு முன் வந்து பணம் கட்டாதது குறித்து விசாரித்துள்ளார். வீடு வரை வந்து கடன் கேட்டதால் கவுரவ குறைச்சலாக நினைத்துள்ளார்.
இதனால் மிகவும் மன அழுத்தத்திற்கு சென்ற பார்த்தசாரதி அவரது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். பின்னர் இது குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் பார்த்தசாரதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்ற வருகிறது.