திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
ரோட்டோரம் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது திடீர் ஆசிட் வீச்சு.! அதிர்ந்த சென்னை.! நடந்தது என்ன??
சென்னை ஈக்காட்டுதாங்கல் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு அருகே சாலையோரம் வசித்து வந்த பொதுமக்கள் படுத்து தூங்கிக் கொண்டு இருந்துள்ளனர். அப்பொழுது சுமார் 9 மணியளவில் அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் தூங்கிக்கொண்டிருந்த பெண் மீது ஆசிட் பாட்டிலை வீசியுள்ளார். பின் அங்கிருந்து அந்த நபர் தப்பி ஓடியுள்ளார்.
ஆசிட் வீச்சு
இந்த நிலையில் ஆசிட் பாட்டில் உடைந்து உள்ளே இருந்த திராவகம் தெறித்ததில் அங்கிருந்த இரு பெண்கள், குழந்தை மற்றும் சிலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. குழந்தைக்கு அதிக அளவு காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
போலீசார் விசாரணை
இதுகுறித்து தகவலறிந்த நிலையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ஆசிட் வீசியவர் குற்றவழக்கு ஒன்றில் சிறைக்கு சென்று ஜாமீனில் வெளியே வந்த ராஜா என்பவர் என தெரியவந்துள்ளது. சாலையில் படுத்திருந்த பெண் ஒருவருக்கும், அவருக்கும் ஏற்கனவே பகை இருந்ததாகவும் அதனாலேயே இந்த சம்பவம் நிகழ்ந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: போனில் ஆடர் செய்தால் வீட்டிற்கே வரும் போதைப்பொருள்; சென்னையில் 4 பேர் கும்பல் கைது..!
இதையும் படிங்க: தந்தையின் கள்ளக்காதலை தட்டிக்கேட்ட மகன் சிறையில் அடைப்பு; ஆத்திரத்தில் பல்லை உடைந்ததால் சோகம்.!