போனில் ஆடர் செய்தால் வீட்டிற்கே வரும் போதைப்பொருள்; சென்னையில் 4 பேர் கும்பல் கைது..!



Chennai Korukupet Drug Table Door Delivery Gang 4 Man Arrested 

 

சென்னையில் உள்ள கொருக்குப்பேட்டை உட்பட அதன் சுற்றுவட்டார பகுதிகளில், போதை மாத்திரைகள் அதிகம் விற்பனை செய்யப்படுவதாக காவல் துறையினருக்கு தொடர்ந்து குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வந்துள்ளது. இதனையடுத்து, விசாரணையில் களமிறங்கிய காவல் துறையினர், கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தி இருந்தனர். 

4 பேர் கும்பல் கைது

இதனிடையே, சம்பவத்தன்று வாகன தணிக்கையில் ஈடுபட்ட காவல் துறையினர், சந்தேகத்திற்கு இடமான வகையில் இருசக்கர வாகனத்தில் வருகை தந்த 4 பேர் கும்பலை நிறுத்தி விசாரித்தனர். அப்போது அவர்களின் கைப்பையில் இருந்து மாத்திரைகள் கைப்பற்றப்பட்டன. இதனையடுத்து, இவர்களை காவல் நிலையம் அழைத்துச்சென்று விசாரணை நடத்தப்பட்டது. 

இதையும் படிங்க: சிறுவனுக்கு கட்டாயப்படுத்தி போதை ஊசி.! இளைஞருக்கு ஊர்மக்கள் கொடுத்த தண்டனையால் பரபரப்பு!!

வீடு-வீடாக போதைப்பொருள் விற்பனை

விசாரணையில், 4 பேர் கும்பலாக சேர்ந்து போதை மாத்திரை விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதற்காக தனியாக செயலி ஒன்றையும் பயன்படுத்தி வந்த கும்பல், அதில் வரும் ஆர்டர்களுக்கு டோர் டெலிவரியும் செய்து வந்துள்ளார். 10 மாத்திரைகள் கொண்ட அட்டையை ரூ.4500 க்கு வாங்கி, 1 அட்டை ரூ.2000 என இக்கும்பல் விற்பனை செய்துள்ளது. 

இளைஞர்கள் கும்பலிடம் விசாரணை

போதைக்கு அடிமையான நபர்கள் இவர்களிடம் பணம் கொடுத்து போதை அட்டையையும் பெற்று பயன்படுத்தி வந்துள்ளனர். தற்போது இந்த விவகாரத்தில் ஈடுபட்ட கணேஷ் (21), ராஜேஷ் (22), ரஞ்சித் (27), உதயகுமார் (21) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர்களிடம் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க: தந்தையின் கள்ளக்காதலை தட்டிக்கேட்ட மகன் சிறையில் அடைப்பு; ஆத்திரத்தில் பல்லை உடைந்ததால் சோகம்.!