தமிழக அரசியலில் திடீர் திருப்பம்!! சசிகலாவை சந்தித்த முக்கிய நபர்கள்.!
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தி.நகரில் உள்ள இல்லத்தில் ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு சசிகலா மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா, ஜெயலலிதாவின் உண்மையான உடன்பிறப்புகள் ஒன்றாக இணைந்து சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளவேண்டும். சட்டமன்ற தேர்தலில் வெற்றிப்பெற நான் உங்களுக்கு துணையாக இருப்பேன். ஜெயலலிதாவின் உடன்பிறப்புகள் மீண்டும் ஒன்றிணைந்து தேர்தலில் வெற்றி பெற பாடுபட வேண்டும். விரைவில் தொண்டர்கள், மக்களை சந்திக்க உள்ளேன் என தெரிவித்தார்.
இந்தநிலையில், சசிகலாவை சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தனது மனைவி ராதிகாவுடன் சந்தித்து பேசினார். மேலும், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன், பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் திரு.V.M. முத்துக்குமார், சமூக ஆர்வலர் திரு.டிராபிக் ராமசாமி உள்பட அரசியல் கட்சித் தலைவர்கள், விவசாயப் பிரதிநிதிகள், இயக்குனர் பாரதிராஜா, அமீர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் சந்தித்தனர். இவ்வாறு முக்கிய பிரபலங்கள் சசிகலாவை சந்தித்துள்ளதால் அரசியலில் பெரும் திருப்பங்கள் ஏற்ப்படலாம் என எதிர்பார்க்கபடுகிறது.