மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சென்னை: 13 வயது சிறுமி பலாத்காரம்; காதல் பெயரை சொல்லி இளைஞர் பகீர் செயல்.!
சென்னையில் வசித்து வரும் 13 வயது சிறுமி, அங்குள்ள பள்ளியில் எட்டாம் வகுப்பு பயின்று வருகிறார். இவர் தனது பாட்டியின் பராமரிப்பில் இருந்து வந்துள்ளார்.
மேலும், குடும்ப வறுமை காரணமாக சூப்பர் மார்க்கெட்டில் பகுதி நேரமாகவும் வேலைக்கு சென்று வந்துள்ளார். இதனிடையே, சிறுமிக்கு 17 வயது வட மாநில இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
சிறுமி மாயம்
இவர்கள் இருவரும் நட்பாக பேசி வந்ததாக கூறப்படும் நிலையில், கடந்த ஆகஸ்ட் 30ஆம் தேதி பள்ளிக்குச் சென்ற சிறுமி திரும்பி மீண்டும் வீட்டுக்கு வரவில்லை.
இதையும் படிங்க: போலி என்சிசி முகாம் நடத்தி பள்ளி மாணவிகள் பலாத்காரம் விவகாரம்; தேசிய பெண்கள் ஆணையம் உத்தரவு.!
இதனால் பதறிப்போன பாட்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, காவல்துறையினர் புகாரை ஏற்று விசாரணை நடத்தினர். மேலும், வடமாநில இளைஞரின் செல்போனில் எண்ணை வைத்து அவர்களின் இருப்பிடத்தையும் கண்டறிந்தனர்.
பாலியல் பலாத்காரம்
பின் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், சிறுமியை மீட்டு இளைஞனை கைது செய்தனர். விசாரணையில் சிறுமி பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டது உறுதியாகவே, சிறுவனை போக்சோவில் அதிகாரிகள் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: 14 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கர்ப்பிணியாக்கிய பூசாரி: அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்.!