பெண்ணின் சேலையை இழுத்து அவமதித்த அதிமுக பிரமுகர்; சென்னையில் அதிர்ச்சி.!



in Chennai AIADMK Supporter Arrested

 

சென்னையில் உள்ள மயிலாப்பூர், நொச்சிக்குப்பம் பகுதியில் வசித்து வரும் நபர், 2 நாட்களுக்கு முன்னதாக டீ குடிக்க கடைக்கு சென்றார். அச்சமயம், நொச்சிக்குப்பம் பகுதியில் வசித்து வரும் அதிமுக துணை செயலாளர் காசிநாதன், டீக்கடைக்கு வந்த்துள்ளார். பின் தனது மிதிவண்டிக்கு பதில், வேறொரு இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்றார். 

இருதரப்பு வாக்குவாதம்

இதனை மற்றொரு மிதிவண்டி உரிமையாளர் கேட்கவே, அவர் இந்த சைக்கிள் என்னது தான் என வடிவேலு பாணியில் கூறிவிட்டு எடுத்து சென்றுள்ளார். இதனால் சைக்கிளை இழந்தவர் மகள்களிடம் கூறி புலம்பி இருக்கிறார். இதனால் அவரின் 2 மகள்கள், காசிநாதனின் வீட்டிற்கு சென்று தந்தையின் மிதிவண்டியை கேட்டுள்ளனர். 

இதையும் படிங்க: இரும்பு கம்பி தலையில் விழுந்து சோகம்; 7 வயது சிறுவன் பரிதாப பலி.! 

இந்த விஷயத்தில் இருதரப்பு வாக்குவாதம் உண்டாகவே, காசிநாதன் பெண்களை ஆபாசமாக பேசி இருக்கிறார். மேலும், ஒரு பெண்ணின் சேலையை பிடித்து இழுத்து கீழே தள்ளியுள்ளார். இதனால் விஷயம் தொடர்பாக பெண்மணி மயிலாப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

புகாரை ஏற்ற காவல்துறையினர் அதிமுக பிரமுகரான காசிநாதனை பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தனர். 

இதையும் படிங்க: ஒரு நிமிட சுகம்.. வாழ்க்கையுடன், மருந்து ஊசி போதையால் கையே போச்சு.. சென்னை இளைஞர் பகீர் பேட்டி.!