இரும்பு கம்பி தலையில் விழுந்து சோகம்; 7 வயது சிறுவன் பரிதாப பலி.! 



in Chennai Avadi 7 Year Old Boy Died 

நண்பர்களுடன் விளையாடச் சென்ற 7 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார்.

சென்னையில் உள்ள ஆவடி, முத்தாபுதுப்பேட்டை பகுதியை சேர்ந்த 7 வயது சிறுவன் ஆத்விக். சிறுவன் சம்பவத்தன்று தனது நண்பர்களுடன், அங்குள்ள விமானப்படை ஊழியர்கள் குடியிருப்பு மைதானத்திற்கு சென்றுள்ளார். 

தலையில் வீழ்ந்தது

அங்கு கால்பந்தாட்ட விளையாட்டு அடைபெற்றபோது, சிறுவன் கோல் கீப்பராக இருந்துள்ளார். அச்சமயம், கோல் கம்பி திடீரென சரிந்து விழுந்தது. கோல் கம்பி துருப்பிடித்து இருந்ததாக கூறப்படும் நிலையில், இந்த சோகம் நடந்தது.

இதையும் படிங்க: #Breaking: சென்னையில் மீண்டும் பயங்கரம்.. 13 வயது சிறுமியிடம் காவலர் அத்துமீறிய கொடுமை..! போலீஸ் கார், பூத்தில் நடந்த துயரம்.!

chennai

மரணம் உறுதி

இதனால் தலையில் படுகாயமடைந்து துடித்த சிறுவனை, அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். மருத்துவமனையில் சிறுவனின் மரணம் உறுதி செய்யப்பட்டது. இந்த விஷயம் குறித்து முத்தாபுதுப்பேட்டை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: ஒரு நிமிட சுகம்.. வாழ்க்கையுடன், மருந்து ஊசி போதையால் கையே போச்சு.. சென்னை இளைஞர் பகீர் பேட்டி.!