#BREAKING : தேவா பற்றி கேட்ட செய்தியாளர்.. இளையராஜா டென்ஷனாகி சொன்ன வார்த்தை.!
#Breaking: சென்னையில் மீண்டும் பயங்கரம்.. 13 வயது சிறுமியிடம் காவலர் அத்துமீறிய கொடுமை..! போலீஸ் கார், பூத்தில் நடந்த துயரம்.!

13 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக காவலர் கைது செய்யப்பட்டார்.
சென்னையில் உள்ள ஐஸ்ஹவுஸ் பகுதியில் 13 வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறார். இவர் சம்பவத்தன்று தனது வீட்டில் இருந்து வெளியேறினார். இதனால் பதறிப்போன பெற்றோர், சிறுமியை கண்டறிந்து தரக்கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதையும் படிங்க: ஒரு நிமிட சுகம்.. வாழ்க்கையுடன், மருந்து ஊசி போதையால் கையே போச்சு.. சென்னை இளைஞர் பகீர் பேட்டி.!
புகாரை ஏற்ற காவல்துறையினர், சிறுமி மாயமானது குறித்து விசாரித்து அவரை மீட்டனர். அவர் கொடுத்த வாக்குமூலத்தின் பேரில் சிறுமியின் 16 வயது ஆண் நண்பர், ஆண் நண்பரின் தாய் என 2 பேர் போக்ஸோவில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
காவல் உதவி மையத்தில் வைத்து சீண்டல்
இதனிடையே, சிறுமி அளித்த அதிர்ச்சி தகவல் ஒன்று அதிகாரிகளுக்கு அதிர்ச்சி தந்தது. அதாவது, 13 வயது சிறுமி வீட்டில் இருந்து வெளியேறி, பட்டினப்பாக்கம் பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு நள்ளிரவு நேரத்தில், காவல் வாகனம் ஒன்று இருந்தது. அங்கிருந்த அதிகாரியிடம் வீட்டிற்கு செல்ல உதவி கேட்டுள்ளார்.
அப்போது, பணியில் இருந்த காவல் வாகன ஓட்டுநரான காவலர் ராமன், சிறுமியிடம் பேச்சுக்கொடுத்து அவரை பட்டினப்பாக்கம் காவல் உதவி மையம் உள்ள போலீஸ் பூத்துக்கும், காவல் வாகனத்திலும் அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார் என்பது தெரியவந்தது.
போக்ஸோவில் கைது
இதனையடுத்து, சிறுமி அளித்த வாக்குமூலத்தின் பேரில் விசாரணை நடத்திய அதிகாரிகள், காவலர் ராமனுக்கு எதிராக கூறப்பட்ட குற்றசாட்டுகளை உறுதி செய்தனர். இதனால் அவரையும் போக்ஸோவில் கைது செய்து அதிகாரிகள் சிறையில் அடைத்தனர். இந்த விஷயம் தொடர்பான விசாரணை தற்போது மயிலாப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: போதையில் அட்ராசிட்டி செய்த இளைஞன்.. வெளுத்து எடுத்த பொதுமக்கள்.!