53 வயதில் கூட தபூ செம்ம ஹாட்டா இருக்காங்க.?! வைரல் போட்டோஷூட்.. இளம் நடிகைலாம் ஓரம்போங்க.!
பேஸ்புக்கில் பதிவிடப்பட்ட பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து 2 ஆண்டுகள் மோசடி; 26 வயது இளைஞன் கைது.!
சமூக வலைத்தளங்களில் பெண்கள் பதிவு செய்யும் புகைப்படம், எங்கோ ஒரு இடத்தில் மர்ம நபரால் திருப்பட்டு அவதூறான விஷயங்களுக்கு பகிரப்படுகிறது.
சென்னையில் வசித்து வரும் இளம்பெண் ஒருவரின் புகைப்படத்தை, சமூக வலைத்தளங்கள் வாயிலாக எடுத்துக்கொண்ட இளைஞர், அதனை பயன்படுத்தி முகநூல், வாட்சப், இன்ஸ்டாகிராம் ஆகிய செயலிகளில் போலியான கணக்கு ஒன்றை தொடங்கியுள்ளார்.
நிர்வாண வீடியோ காலுக்கு ரூ.800, ரூம் சர்விசுக்கு ரூ.3000 என விளம்பரம்
அந்த கணக்கை தொடங்கிய இளைஞர், பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து பதிவிட்டு விபச்சாரத்திற்கு அழைப்புவிடுப்பது, நிர்வாண காலில் தோன்ற கட்டணம் என பணம் வசூல் செய்து வந்துள்ளார்.
இதையும் படிங்க: 1 ரூபாய் ஊறுகாவுக்காக அடித்து நொறுக்கப்பட்ட மளிகைக்கடை?.. சென்னையில் பகீர் சம்பவம்.!
தனது புகைப்படம் மர்ம நபரால் தவறிய முறையில் உபயோகம் செய்யப்படுவதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெண்மணி, காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
26 வயதாகும் இளைஞர் கைது
இந்நிலையில், இளம்பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து, 2 ஆண்டுகளாக முறைகேடான விஷயங்களுக்கு பயன்படுத்தி வந்த விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மரக்காணம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் கிருஷ்ணன் (வயது 26) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
முகநூல் வாயிலாக ஆண்களுக்கு தொடர்பு கொள்ளும் இவர், பெண்ணைப்போல பேச தொழில்நுட்பத்தை பயன்படுத்தி குரலை மாற்றி ஆண்களிடம் மோசடி செயலில் ஈடுபட்டுள்ளார்.
இதையும் படிங்க: சென்னை வான் சாகச நிகழ்ச்சியில் த.வெ.க உறுப்பினரும் பலி..!