சென்னை வான் சாகச நிகழ்ச்சியில் த.வெ.க உறுப்பினரும் பலி..!



chennai-air-show-tvk-party-supporter-also-dies

 

சென்னையில் உள்ள மெரினா கடற்கரையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்திய விமானப்படை தினத்தையொட்டி, 21 ஆண்டுகளுக்கு பின்னர் வான் சாகச நிகழ்வு நடைபெற்றது. சுமார் 15 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் முன்னிலையில், இந்திய விமானப்படை தங்களின் திறமைகளை செய்துகாண்பித்து அசத்தியது. 

இதற்கான ஏற்பாடுகள் மாநில அரசு செய்திருந்தது. இதனிடையே, விமானப்படை சாகசத்தை நேரில் காண வந்தவர்களில், 5 பேர் உடலில் நீரிழப்பு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தனர். 105 க்கும் அதிகமானோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீட்டிற்கு திரும்பி இருந்தனர். 

இதையும் படிங்க: சென்னை நகரை திணறவைத்த இந்திய விமானப்படை சாகசம்; திரும்பிய திசையெல்லாம் மக்கள் வெள்ளம்., கொண்டாட்டமும்., அவதியும்.!

த.வெ.க நிர்வாகி

அந்த வகையில், சென்னையில் உள்ள திருவெற்றியூர் பகுதியைச் சேர்ந்த த.வெ.க உறுப்பினர் கார்த்திகேயன் என்பவரும் பரிதாபமாக உயிரிழந்து இருந்தார். அவரின் மறைவு குடும்பத்தினரிடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி இருந்தது. 

அரசுக்கு த.வெ.க தலைவர் கோரிக்கை

இந்த சோகம் குறித்து கண்டனத்துடன் அரசுக்கு அறிவுரை வழங்கியுள்ள த.வெ.க தலைவர் விஜய், தனது சமூக வலைதளப்பக்கத்தில், "விமானப்படை வான் சாகச நிகழ்ச்சியின் போது, அடிப்படை வசதிகள், போக்குவரத்து வசதிகள் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்டவை மீது அரசு போதுமான கவனம் செலுத்தவில்லை என்று நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பொதுமக்கள், தங்கள் வேதனையை வெளிப்படுத்திய செய்திகள் ஊடகங்களில் வந்துள்ளன.

இப்படி மக்கள் அதிக அளவில் கூடுகிற இடங்களில் அடிப்படை மற்றும் அத்தியாவசியத் தேவைக்கான வசதிகளையும் பாதுகாப்பையும் திறம்படச் செயல்படுத்துவதில், இனி வரும் காலங்களில் கவனம் செலுத்த வேண்டும் எனத் தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன்" என தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: நெரிசலில் சிக்கிக்கொண்ட ஆம்புலன்சில் துடித்த கர்ப்பிணி; ஓடிச்சென்று உதவிய இளைஞர்கள்.. குவியும் பாராட்டுக்கள்.!