"மின் மீட்டர் சரிபார்க்க வந்திருக்கேன்" - மூதாட்டியின் கவனத்தை திசைதிருப்பி நகைகள் கொள்ளை.!



  in Chennai Ice House Robbery Using TNEB Name 

சென்னையில் உள்ள ஐஸ் ஹவுஸ் பகுதிகள் வசித்து வரும் பெண்மணி ஜியம் (வயது 80). இவர் சம்பவத்தன்று வீட்டில் இருந்தபோது, தன்னை மின்வாரிய ஊழியர் என அறிமுகப்படுத்திய நபர் ஒருவர், வீட்டிற்குள் வந்து மின்மீட்டரை சரி பார்ப்பதாக கூறி இருக்கிறார். 

இதனையடுத்து வீட்டிற்குள் அவரை அனுமதி செய்த நிலையில், மூதாட்டியின் கவனத்தை திசை திருப்பிய மர்ம நபர், பீரோவில் இருந்து 15 சவரன் நகையை எடுத்துக்கொண்டு ஓட்டம் பிடித்தார். 

robbery

குற்றவாளி கைது

மூதாட்டி இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, அதிகாரிகள் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை முன்னெடுத்தனர். சுமார் 100 சிசிடிவி கேமராக்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ள நிலையில், ரூபாய் 8 லட்சம் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்த முகலிவாக்கம் பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

இதையும் படிங்க: பெயிண்ட் அடிக்க ஆள் வைத்த மாமனார்.. பலே வேலை பார்த்த நபர்.. மருமகள் கண்ட காட்சி.!

இதையும் படிங்க: #Breaking: அடுத்த 3 மணிநேரத்திற்கு 30 மாவட்டங்களில் கனமழை; வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!