மகாபலிபுரத்தில் பணியாளர் தாக்கப்பட்ட விவகாரம்; 2 பெண்கள் உட்பட 3 பேர் கைது.!



in Chennai Mahabalipuram Worker Beaten by 3 Man Gang Later They Arrested 

 

சென்னையில் உள்ள மகாபலிபுரம் பகுதிக்கு காரில் சுற்றுலா வந்த குடும்பத்தின், நோ பார்க்கிங் பகுதியில் காரை நிறுத்த முற்பட்டு விரைந்தது. இதனை அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்த ஒப்பந்த பணியாளர் கவனித்துள்ளார்.

நடுரோட்டில் தாக்குதல்

காரை மேற்படி அவர் செல்ல அனுமதி செய்யாத நிலையில், அவரிடம் வாக்குவாதம் செய்த காரில் வந்த கும்பல், நடுரோட்டில் அவரை சரமாரியாக தாக்கியது. இந்த தாக்குதல் சம்பவத்தில் ஒப்பந்த பணியாளர் காயமடைந்தார். 

இதையும் படிங்க: காவலர்களை அவதூறு பேசி அட்ராசிட்டி செய்த ஜோடி; கவனிப்புக்கு பின் மன்னிப்பு கேட்டு வீடியோ.!

மூவர் கைது

இந்த விஷயம் குறித்த காணொளி வெளியாகி பெரும் கண்டனத்தை குவித்த நிலையில், காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், ஒப்பந்த பணியாளரை தாக்கிய 3 பேரை கைது செய்தனர்.

இதையும் படிங்க: #Breaking: செப்டிக் டேங்க் லாரி மோதி கல்லூரி மாணவி பலி; சென்னையில் சோகம்.!