நண்பனின் தங்கை குறித்து அவதூறு பேச்சு; முன்னாள் ஊராட்சியை மன்றத் தலைவரின் மகன் வெட்டிக்கொலை.!
சென்னையில் உள்ள மணலி, புதுநகர், நாப்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் ராயப்பன். இவரின் தந்தை நாபாளையம் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் ஆவார்.
இதனிடையே, சம்பவத்தன்று ராயப்பன் உட்பட சிலர் மதுபானம் அருந்தி இருக்கின்றனர். அப்போது, ராயப்பன் நண்பரின் சகோதரி குறித்து தவறாக பேசியதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: 16 வயதில் ஓட்டம் பிடித்த சிறுமி.. கணவர், கள்ளக்காதலன் போக்ஸோவில் கைது.!
காவல்துறையினர் விசாரணை
இந்த விவகாரத்தில் நண்பர்களுக்கு இடையே தகராறு ஏற்படவே, ஆத்திரத்தில் ராயப்பன் வெட்டிக்கொல்லப்பட்டார். பின் அனைவரும் தப்பிச் சென்றுவிட, காவல்துறையினருக்கு தகவல் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, அதிகாரிகள் ராயப்பனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த நிலையில், கொலை செய்த நபர்களுக்கு வலைவீசி இருந்தனர்.
இந்நிலையில், ராயப்பனை கொலை செய்ததாக பிரசாந்த், அகிலன், ரவீந்திர குமார் ஆகியோர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் கொலைக்கான முதற்கட்ட காரணம் தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: எனக்கு திருமணம் ஆகிருச்சு.. போனில் ஷாக் செய்தி சொன்ன காதலன்., தீக்குளித்து உயிரைவிட்ட இளம்பெண்.!