16 வயது சிறுமி செய்யும் வேலையா இது?.. கணவர், கள்ளக்காதலன் போக்ஸோவில் கைது.!



in-chennai-pulianthope-minor-girl-marriage-affair

 

சென்னை புளியந்தோப்பில் வசித்து வரும் 34 வயது பெண்ணுக்கு, 16 வயது மகள் இருக்கிறார். இவர் பாரிமுனையில் செயல்படும் துணிக்கடையில் பணியாற்றி வந்தபோது, பிரகாஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு காதலித்து இருக்கின்றனர். 

இருவரும் 2 ஆண்டுகளாக காதலித்து, ஓராண்டுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டனர். தற்போது இருவருக்கும் ஒரு வயதுடைய பெண் குழந்தை இருக்கிறது. பிரசவத்திற்கு போலியான ஆதார் கொடுத்து குழந்தை திருமணத்தை மறைத்து இருக்கின்றனர். 

இதையும் படிங்க: எனக்கு திருமணம் ஆகிருச்சு.. போனில் ஷாக் செய்தி சொன்ன காதலன்., தீக்குளித்து உயிரைவிட்ட இளம்பெண்.!

சிறுமியின் கணவர், கள்ளக்காதலன் கைது

குழந்தை பிறந்த 6 மாதத்தில் தம்பதியின் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்துவிட, தாய் வீட்டில் இருந்த பெண்ணுக்கு ஓட்டேரி பகுதியை சேர்ந்த சதீஷுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. 

chennai

கள்ளக்காதல் ஜோடி சேர்ந்து வாழலாம் என முடிவெடுத்து சிறுமி சில நாட்களுக்கு முன் அவருடன் ஓட்டம் பிடித்துள்ளார். இதனால் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்படவே, விசாரணையில் அனைத்து உண்மையும் அம்பலமானது.

இதனையடுத்து, பிரகாஷ், சிறுமியின் புதிய காதலர் சதீஷ் ஆகியோர் போக்ஸோவில் கைது செய்யப்பட்டனர். 

இதையும் படிங்க: ஹவாலா பணம் எடுத்து வருவோரை குறிவைத்து மோசடி; காவலர், வருமானவரித்துறை அதிரடி கைது.!