நடுரோட்டில் காரை மறித்து பெண்களை துரத்திய இளைஞர்கள்.! கைக்குழந்தையுடன் பதறிய சென்னை பெண்கள்.!!



in-chennai-muttukadu-car-blocked-by-8-man-gang

 

சென்னையில் உள்ள கானாத்தூர் பகுதியைச் சேர்ந்தவர், கடந்த ஜனவரி 25 அன்று நள்ளிரவில், தனது குடும்பத்துடன் முட்டுக்காடு பகுதிக்கு சென்றுள்ளார். 

காரில் 3 பெண்கள், ஒரு கைக்குழந்தை என இவர்கள் பயணித்த நிலையில், நள்ளிரவு நேரத்தில் இவர்களின் காரை 8 பேர் கொண்ட இரண்டு காரில் வந்த மர்ம நபர்கள் மறித்து இருக்கின்றனர். 

இதையும் படிங்க: சென்னை: கலிகாலத்தின் உச்சம்.. 12, 14, 16 வயது சிறுமிகள் அக்யுஸ்ட் கேடிகளுடன் காதல்., பலாத்காரம்..!

இதனால் பதறிபோனவர்கள் தங்கள் காரை இயக்கி தப்பிச் செல்ல முற்பட்டபோதும், இளைஞர்கள் குழு இவர்களை மறித்து காரின் அருகே வந்து தாக்குதல் நடத்த முற்பட்டது. 

8 பேர் கும்பல் அதிர்ச்சி செயல்

ஒருகட்டத்தில் பதற்றத்துடன் பெண்கள் தப்பி அருகேயுள்ள உறவினரின் வீட்டிற்கு சென்ற நிலையில், அங்கு வந்த கும்பல் வைத்து மிரட்டல் செயலில் ஈடுபட்டு தப்பிச் சென்றது.

இந்த விஷயம் குறித்து பாதிக்கப்பட்ட பெண்மணி குடும்பத்தின் தரப்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல்துறையினர் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.

8 பேர் கொண்ட கும்பல் பயணித்த 2 காரில், ஒரு காரில் கட்சி ஒன்றின் கொடியும் கட்டப்பட்டு இருந்தது. இதனால் அரசியல் கட்சி புள்ளியா? அரசியல் கட்சியின் ஆதரவு புள்ளியா? என விசாரணை நடைபெறுகிறது.  


 

இதையும் படிங்க: சென்னை: கேரட் சாப்பிட்ட 2 வயது சிறுமி மரணம்.. பெற்றோர் கண்ணீர்.!