சென்னை: கலிகாலத்தின் உச்சம்.. 12, 14, 16 வயது சிறுமிகள் அக்யுஸ்ட் கேடிகளுடன் காதல்., பலாத்காரம்..!



 in Chennai Perambur 3 Minor Girls Raped by Love Boys Gang 

சென்னையில் உள்ள பெரம்பூர் பகுதியில் 12 வயது சிறுமி வசித்து வருகிறார். அங்குள்ள தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு பயின்று வருகிறார். கடந்த 24 அன்று சிறுமி தனது தோழியின் குடும்ப நிகழ்ச்சிக்கு சென்று வருகிறேன் என பெற்றோரிடம் தகவல் சொல்லி வீட்டில் இருந்து சென்றுள்ளார். பின் மீண்டும் அவர் வீட்டிற்கு வரவில்லை. போனில் தொடர்புகொண்டும் பலனில்லாத காரணத்தால் திருவிக நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

புகாரை ஏற்ற காவல்துறையினர் சிறுமி பயன்படுத்தி வந்த செல்போன் நம்பர் டவர் வைத்து சோதனை செய்தபோது, பெரம்பூர் வீனஸ் சந்தை பகுதியில் சிறுமி இருப்பதை உறுதி செய்தனர். அங்கு 12 வயது சிறுமியோடு, அவரின் 16 வயது காதலர் என அடையாளப்படுத்தப்பட்ட நபர் இருந்தார். இருவரும் தனிமையில் இருந்தனர். 

Rape

காதலர்களுடன் தனிமையில் சிறுமிகள்

இதேபோல, பெரம்பூரில் வசித்து வரும் 14 வயது சிறுமி, 21 வயதுடைய காதலர் கரீமுல்லா என்பவருடனும், வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி, அகரம் பகுதியை சேர்ந்த 19 வயது அபிஷேக் என்பவருடன் தனிமையில் இருந்துள்ளார். மூன்று ஜோடிகளையும் நேரில் கண்டு அதிர்ந்துபோன காவல்துறையினர், அவர்களை மீட்டு காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.  

இதையும் படிங்க: மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமி பாலியல் வன்கொடுமை; 27 வயது நபர் போக்ஸோவில் கைது.!

மருத்துவப்பரிசோதனையில் சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டது உறுதியானது. இதனால் அவர்கள் அரசு மகளிர் காப்பதில் ஒப்படைக்கப்பட்டனர். சிறுமிகளுடன் இருந்த 3 நபர்களின் மீதும் போக்ஸோவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது. இவர்களில் கரீமுல்லா மீது வழிப்பறி, அடிதடி என 11 வழக்கும், அபிஷேக் மீது திருட்டு வழக்கும், 16 வயது சிறுவன் மீது திருட்டு உட்பட 6 வழக்கும் நிலுவையில் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையும் படிங்க: 16 வயது சிறுமியை சவுக்குத்தோப்பில் பலாத்காரம் செய்த காதலன்.. நண்பனையும் அத்துமீற அனுமதித்த கொடுமை.!