லாரி சக்கரத்தில் சிக்கி 51 வயது பெண் பரிதாப பலி.! 



in Chennai Otteri Woman Dies an Accident 

 

பெண் விபத்தில் சிக்கி உயிரிழந்த சோகம் சென்னையில் நடந்துள்ளது. 

சென்னையில் உள்ள ஓட்டேரி பகுதியில் வசித்து வருபவர் பத்மினி (வயது 51). இவரின் மகன் ஹரிஹரன் (வயது 24). சம்பவத்தன்று இவர்கள் இருவரும் இருசக்கர வாகனத்தில், கொளத்தூர் நோக்கி சென்றுகொண்டு இருந்தனர்.

இதையும் படிங்க: அண்ணா பல்கலை., மாணவி விவகாரம்; யார் அந்த சார்? தெரிந்தது உண்மை? குற்றப்பத்திரிகையில் தகவல்.!

உறவினர் ஒருவரின் வீட்டிற்கு இருவரும் சென்றதாக தெரியவருகிறது. பின் அங்கிருந்தது மீண்டும் வீட்டுக்கு வந்தனர். அப்போது, இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதியது.

chennai

இந்த சம்பவத்தில், வாகனத்தில் இருந்து நிலைதடுமாறி விழுந்த பத்மினியின் மீது, லாரியின் சக்கரங்கள் ஏறி-இறங்கியது. இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த பெண்மணி பரிதாபமாக உயிரிழந்தார்.

ஹரிஹரன் லேசான காயத்துடன் உயிர்தப்பிய நிலையில், விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் பெரியார் (வயது 26) கைது செய்யப்பட்டார். 

இதையும் படிங்க: #Breaking: ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பொதுத்தேர்வு தேதிகள்; பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.!