அண்ணா பல்கலை., மாணவி விவகாரம்; யார் அந்த சார்? தெரிந்தது உண்மை? குற்றப்பத்திரிகையில் தகவல்.!



in Chennai Anna University Student Case 

 

சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த மாணவி ஒருவர், ஞானசேகரன் என்ற நபரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். அவர் மாணவியை வன்கொடுமை செய்யும் முன், காதலருடன் தனிமையில் ஒதுங்கியதை வீடியோ எடுத்து மிரட்டியுள்ளார். மேலும், நான் அழைக்கும்போதெல்லாம் வந்து, சார் என போனில் ஒருவரை தொடர்புகொண்டு பேசி, அவருடன் தனிமையில் இருக்க வேண்டும் எனவும் மிரட்டி இருக்கிறார். 

மாணவி வாக்குமூலமாக பதிவ செய்த விஷயம் வெளியே கசிந்து, யார் அந்த சார்? என்ற கேள்வியை எழுப்பியது. இந்த விஷயம் குறித்து விசாரிக்க நீதிமன்றத்தின் கண்காணிப்பின் பேரில் சிறப்பு குழு அமைக்கப்பட்டது. இதனிடையே, சிறப்புக்குழு குற்றப்பத்திரிகையில் சார் தொடர்பாக புதிய தகவலை பதிவு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. 

இதையும் படிங்க: #Breaking: ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பொதுத்தேர்வு தேதிகள்; பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.!

chennai

சாரே இல்லையாம்.. எல்லாம் நாடகமாம்..

குற்றவழக்கில் தொடர்புடைய புள்ளியான ஞானசேகரன், சாலையோர பிரியாணி கடையை நடத்தி வந்துள்ளார். கொள்ளை தொடர்பான சம்பவத்தில் ஈடுபட்டு, சொத்துக்களையும் வாங்கி குவித்துள்ளார். கடந்த டிசம்பர் 23, 2024 அன்று, இரவு 7 மணியளவில் நுழைந்தவர், செல்போன் அழைப்பு மூலமாக தன்னை யாரும் கண்காணிக்க கூடாது என, ஏர்பிளேன் ஆப்ஷனில் போனை வைத்துள்ளார். 

பின் 07:45 மணியளவில் காதல் ஜோடியை நோட்டமிட்டு, மாணவியின் கல்லூரி அடையாள அட்டையினை பறித்தார். மாணவியை மிரட்டி செல்போனில் வீடியோ எடுத்தவர் டீன், வார்டன், ஊழியர்களிடம் காண்பிப்பதாக கூறி மிரட்டியுள்ளார். பின் பாலியல் தொல்லை கொடுத்தவர், அதனை வீடியோ எடுத்துள்ளார். மாணவியை அச்சுறுத்த சார் என அழைத்து ஒருவரிடம் பேசுவதுபோல் நடித்துள்ளார். மேலும், பல்கலைக்கழகத்தில் தனக்கு அதிகாரம் உள்ளது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த இவ்வாறான செயலை செய்துள்ளார். அவர் தனிநபராக இவ்விஷயத்தில் ஈடுபட்டுள்ளார் என குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

இதையும் படிங்க: பயிற்சி மருத்துவர்களிடம் கஞ்சா பறிமுதல்; சென்னையில் அதிர்ச்சி சம்பவம்.!