மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பிரியாணி கடை தகராறு; காவலரை நண்பர்களுடன் சேர்ந்து தாக்கிய போதை வழக்கறிஞர்..!
நண்பர்களுடன் சேர்ந்து காவலரை தாக்கிய வழக்கறிஞர் உட்பட 4 பேர் கும்பல் கைது செய்யப்பட்டது.
சென்னையில் உள்ள ஓட்டேரி, புளியந்தோப்பு பகுதியில் செயல்பட்டு வரும் இரவு பிரியாணி கடை ஒன்றில், காரில் வந்த 4 பேர் கும்பல் தகராறு செய்வதாக காவல்துறை கட்டுப்பட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மார்பில் அயன்பாக்ஸ் சூடு., உடலெல்லாம் ரணகொடூரம்.. பணத்திமிர், அதிகார வர்க்கத்தின் அடக்குமுறைக்கு பலியான 16 வயது சிறுமி.!
இதனையடுத்து, தகவல் அறிந்த ஓட்டேரி காவல்துறையினர், நிகழ்விடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது, போதையில் இருந்த கும்பல் அதிகாரிகளிடமும் அடாவடியாக பேசி இருக்கிறது.
இதில், காவலர் நிஜித் என்பவரை வழக்கறிஞர் என தன்னை அடையாளப்படுத்திய பால சுப்பிரமணியம் தாக்கி இருக்கிறார். இந்த சம்பவத்தைத்தொடர்ந்து, அதிகாரிகள் நால்வரையும் கைது செய்தனர்.
போதையில் தகராறு & கைது
விசாரணையில் இவர்கள் வழக்கறிஞர் பாலசுப்பிரமணியம், பெனிக்ஸ், ஆல்வின், நவீன்குமார் என்பது தெரியவந்தது. நண்பர்களான இவர்கள் பிரியாணி கடையில் போதையில் சாப்பிட சென்றபோது தகராறு செய்துள்ளனர்.
அதனைதொடர்ந்து காவலர்கள் வந்த நிலையில், அவர்களிடம் விசாரணைக்கு முறையாக பதில் சொல்லாமல் போதையில் அடாவடியாக பேசியுள்ளனர். இதனால் அவர்கள் காவல் நிலையம் அழைத்துch செல்லப்பட்ட நிலையில், வழியில் காவலரின் மீது தாக்குதல் நடந்துள்ளது.
இதையும் படிங்க: தண்ணீர் லாரி மோதி தலைநசுங்கி இளைஞர் உயிரிழப்பு; அதிவேகம், தலைக்கவசம் அணியாததால் சோகம்.!