ஹவாலா பணம் எடுத்து வருவோரை குறிவைத்து மோசடி; காவலர், வருமானவரித்துறை அதிரடி கைது.!



in Chennai Triplicane Cop Arrested By Cops foregery 

 

சென்னையில் உள்ள திருவெல்லிக்கேணி பகுதியில், கடந்த டிசம்பர் 17ம் தேதி முகமது என்பவரிடம் இருந்து ரூ.20 இலட்சம் பணம் பறிக்கப்பட்டது. தன்னை வருமான வரித்துறை அதிகாரி என அறிமுகம் செய்த நபர் பணத்தை பறித்ததாக முகமது புகார் அளித்தார். இதன்பேரில் விசாரணை நடத்தி வரப்பட்டது.

விசாரணையில், வருமானவரித்துறை அதிகாரி தாமோதரன், திருவெல்லிக்கேணி காவல் உதவி ஆய்வாளர் ராஜா சிங் ஆகியோர் சேர்நது, கடந்த 3 மாதத்தில் 4 க்கும் மேற்பட்ட வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டது அம்பலமானது. குறிப்பாக ஹவாலா பணத்தை எடுத்து வருவோரை நோட்டமிட்டு இந்த சம்பவம் நடந்துள்ளது.

இதையும் படிங்க: மனவளர்ச்சி குன்றிய மாணவி பலாத்கார விவகாரம்; தோழி அதிரடி கைது.!

மோசடி அம்பலம்

இதற்காக பூக்கடை, ராயபுரம், நேப்பியர் பாலம் பகுதியில் ஹவாலா பணத்தை எடுத்து வருவோரை குறிவைத்து மோசடி நடந்துள்ளது. இந்த விசயத்திற்கு சைதாப்பேட்டை காவல் நிலைய அதிகாரி ஒருவரும் தொடர்பில் இருப்பதாக கூறப்படும் நிலையில், அதிகாரிகள் முதற்கட்டமாக மேற்கூறிய இருவரை கைது செய்துள்ளனர். 

இவர்கள் வழிப்பறி பணத்தில் ஜிம் ஒன்றை சொந்தமாக வாங்கி இருக்கின்றனர். மொத்தமாக ரூ.1 கோடி வரை பணம் வழிப்பறி செய்யப்பட்ட காரணத்தால், இவர்கள் வாங்கிய சொத்துக்கள் குறித்து விசாரணை நடக்கிறது. அவர்களின் அசையும் சொத்துக்கள் பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: 2 நாட்களாக மாற்றம் இல்லாத தங்கம் விலை.. இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ.!