#Breaking: தவெக முக்கியப்புள்ளி புஸ்ஸி கைது; சென்னையில் பரபரப்பு..!



  in Chennai TVK Party Secretary Bussy Anand Arrested by Cops 

உரிய அனுமதியின்றி விஜயின் துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்த புஸ்ஸி ஆனந்த் கைது செய்யப்பட்டார்.

சென்னை அண்ணா பல்கலை.,யில் பயின்று வந்த 19 வயது கல்லூரி மாணவி, அரசியல்கட்சிப் பிரமுகர் ஒருவரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு இருந்தார். இந்த விவகாரம் தொடர்பாக ஞானசேகரன் என்ற நபர் கைது செய்யப்பட்டு, அவரிடம் தொடர் விசாரணை நடந்து வருகிறது. 

விஜய் கடிதம்

இந்நிலையில், தமிழக வெற்றிக்கு கழகத்தின் தலைவர் விஜய், தனது தொண்டர்களுக்கும், தமிழக மக்களுக்கும் கைப்பட கடிதம் எழுதி இருந்தார். அண்ணா பல்கலைக்கழகம் தொடர்பாக எழுதப்பட்ட கடிதத்தை வழங்கும் பணியில் ஈடுபட்ட தவெக பெண் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். 

இதையும் படிங்க: சென்னை: "செம்ம டயர்டு பாஸ்" போதையில் திருடவந்து குறட்டை விட்டு தூக்கம்; 24 வயது இளைஞர் கைது..!

புஸ்ஸி ஆனந்த் கைது

இதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்ட நிலையில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், தி.நகர் பகுதியில் துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்யும் பணியில் ஈடுபட்டார். உரிய அனுமதி இன்றி புஸ்ஸி ஆனந்த் துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்ததாக, சென்னை காவல்துறையினர் புஸ்ஸி ஆனந்தை கைது செய்தனர்.

அவர் தற்போது ஆவடி பகுதியில் இருக்கும் திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள நிலையில், போலீசார் மற்றும் தவெகவினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. நடிகர் & தவெக தலைவர் விஜய், பெண்களுக்கு அரணாக, பாதுகாப்பாக இருப்பேன் என கைப்பட கடிதம் எழுதி இன்று வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: முதல்வர் போஸ்டர் மீது செருப்பு வீச்சு.. வீடியோ எடுத்த நபர் கைது?